Posts

Showing posts from December, 2019

மூன்று C-க்களையும் கண்டு பயம் வேண்டாம்...! வங்கி அதிகாரிகளுக்கு நிர்மலா சீதாராமன் அட்வைஸ்

வங்கிகள் தொடர்பான முறைகேடு வழக்குகளில், அதிகாரிகள் தேவையின்றி சிபிஐ, சிவிசி, சிஏஜி ஆகியவற்றைக் கண்டு அச்சப்படத் தேவையில்லை என்றும், டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை ஊக்குவிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். அடுத்த நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் தயாரிப்பு தொடர்பாக பல்வேறு தரப்பினருடனும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடர் ஆலோசனைகளை நடத்தி வருகிறார். இதன் ஒரு பகுதியாக பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளின் தலைவர்கள் உடன் அவர் ஆலோசனை நடத்தினர். இதில் சிபிஐ இயக்குநர் ரிஷி குமார் சுக்லாவும் கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நிர்மலா சீத்தாராமன், வங்கிகளின் வாராக்கடன் அளவு, கடந்த 2018-ம் ஆண்டைக் காட்டிலும், 2019-ம் ஆண்டில், ஒரு லட்சத்து 69 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு குறைந்திருப்பதாகவும், கடன் வசூல் அதிகரித்திருப்பதாகவும் கூறினார். டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையை ஊக்குவிப்பதில் மத்திய அரசு தீவிரமாக இருப்பதை சுட்டிக்காட்டிய அவர்,  ரூபே (RuPay), பீம் யுபிஐ (Bhim UPI), ஆதார் பே, டெபிட் கார்டு (DebitCard), நிப்ட் (...

வளைய சூரிய கிரகணம்

Image
சூரியனை பூமியும், பூமியை நிலவும் சுற்றி வருகிறது. அப்போது சூரியனுக்கும் பூமிக்கும் இடையே நிலவு வரும் போது மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் பயணிக்கும். சூரியனின் ஒளித் தட்டை நிலவு மறைப்பதால் ஏற்படுவது தான் சூரிய கிரகணம். சூரியனை முழுமையாக நிலவு மறைத்தால் அது முழு சூரிய கிரகணம். அதே நேரம் சூரியனின் மையப்பகுதியை மட்டும் மறைத்து விளிம்பில் வளையம்போல ஒளி தெரிந்தால் அது வளைய சூரிய கிரகணம் என்றழைக்கப்படுகிறது.  இந்த வளைய சூரிய கிரகணம் தான் வரும் 26ஆம் தேதி வருகிறது. இந்த நாளில் சூரியன் ஒரு நெருப்பு வளையம்போல தோன்றி வானில் வித்தை காட்டும்.  26ஆம் தேதி காலை 8.06 மணிக்கு துவங்கும் கிரகணமானது 11.14 மணி வரை நீடிக்கும்.  குறிப்பாக காலை 9.31 மணி முதல் 9.34 மணி வரை 3 நிமிடங்கள் வளைய சூரிய கிரகணம் நீடிக்கும்.  அதேபோல் சூரிய கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்க கூடாது என்றும் அவ்வாறு பார்க்க நேர்ந்தால் கண்களின் விழித்திரை பாதிக்கப்படலாம் என்றும் எச்சரிக்கிறார் விஞ்ஞானி சவுந்தர பெருமாள்.  பொதுவாக சூரிய கிரகணத்தின் போது சாப்பிடக் கூடாது, சமைக்க கூடாது, கர்ப்பிணி பெண்க...

கேஸ் டெலிவரி செய்பவர்களுக்கு டிப்ஸ், அன்பளிப்பு கொடுக்க வேண்டாம்: ஆயில் நிறுவனம் அதிரடி! அதற்கான புகார் எண்ணும் அறிவிப்பு!!

Image
இன்டேன்,பாரத், எச்.பி எரிவாயு உருளை விநியோகத்தின்போது ரசீதில் உள்ள தொகைக்கு அதிகமாக, டிப்ஸ் வழங்க வேண்டாம் என்று  ஆயில் காா்ப்பரேஷன் தெரிவித்துள்ளது. ஆரம்பத்தில் எரிவாயு உருளை எனப்படும் சிலிண்டரைக் கொண்டு வந்து கொடுக்கும் நபர்களுக்கு பொதுமக்கள் அன்பாக 10 அல்லது 20 ரூபாய் கொடுத்து வந்த நிலையில், அது சில பல ஆண்டுகளில், கட்டாயமாகிவிட்டது. தற்போது கீழ் தளமாக இருந்தால் சிலிண்டரைக் கொண்டு வருவோருக்கு  35 ரூபாய் முதல் 40 வரையிலும், ஒவ்வொரு தளத்துக்கும் ஏற்ற வகையில் பணம் கட்டாயமாக வசூல் செய்யப்பட்டு வருகிறது. இதனைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. தற்போது இந்தியன் ஆயில் நிறுவனமே இதுபற்றி திட்டவட்டமாகக் கூறியுள்ளது. எரிவாயு உருளைகள் விநியோகத்துக்கு முந்தைய பரிசோதனைகளான தரம், எடை ஆகியவை உறுதி செய்யப்பட்ட பிறகே நுகா்வோருக்கு வழங்கப்படுகிறது. விநியோகஸ்தா்களால் வழங்கப்படும் ரசீதில் சில்லறை விற்பனை விலை தெளிவாக அச்சிடப்பட்டிருக்கும். வாடிக்கையாளா்கள் உருளையைப் பெற்றுக்கொண்ட பிறகு ரசீதில் அத்தாட்சி அளிக்க வேண்டும். மேலும் சில்லறை விற்பனை விலை என்பது வாடிக்கையாளரின...

முஷாரப் இறந்துவிட்டால் அவர் சடலத்தை 3 நாள் தொங்க விடுங்கள்-பாகிஸ்தான் நீதிமன்றம்.

Image
முன்னாள் அதிபர் முஷாரப்புக்கு தேச துரோக வழக்கில் தூக்கு தண்டனை விதித்த பெஷாவர் உயர்நீதிமன்றத்தின் சிறப்பு பிரிவு தனது தீர்ப்பின் முழு விவரத்தையும் நேற்று வெளியிட்டது. இதில் முஷாரப் மரணம் அடைந்து விட்டாலும் அவர் சடலத்தை தரதரவென இழுத்து வர வேண்டும் என்றும் நாடாளுமன்றத்திற்கு கொண்டு வந்து 3 நாட்களுக்கு தூக்கில் தொங்க விட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு அளித்துள்ள இந்த தீர்ப்பில், முஷாரப்பை குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே குற்றவாளியை தூக்கில் இட வேண்டும் என்றும் அந்த தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 169 பக்கங்கள் கொண்ட இந்த தீர்ப்பின் விவரம் வெளியானதையடுத்து முஷாரப்பின் தண்டனை நிறைவேற்றப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த வழக்கில் மேல்முறையீடு செய்ய முஷாரப் தரப்பு திட்டமிடுவதாகவும் கூறப்படுகிறது. தற்போது உடல் நலிந்த நிலையில் துபாயில் வசிக்கும் முஷாரப் தம் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார். இந்த வழக்கு அடிப்படையற்றது என்றும், பாகிஸ்தான் அதிபராக பத்தாண்டுகள் பணியாற்றியிருப்பதாகவும், நாட்டுக்காக போர் முனைக்கு சென்றதாகவும் முஷா...

சொத்துப் பிரச்சனையில் தந்தையை டிராக்டர் ஏற்றி கொன்ற மகன். செத்துப்போன மனிதம்..

Image
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே சொத்துத் தகராறில் பெற்ற தந்தையை மகனே டிராக்டரை ஏற்றி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனது உடன்பிறந்த சகோதரிகளுக்கும் சொத்தை பங்கு போட்டுக் கொடுத்த ஆத்திரத்தில் கொலையை அரங்கேற்றியவனை போலீசார் தேடி வருகின்றனர். மதுராந்தகம் அடுத்த முருகம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த அண்ணாமலைக்கு 3 மகள்கள் 2 மகன்கள் என 5 பிள்ளைகள்.  தனக்குச் சொந்தமான 15 ஏக்கர் நிலத்தை 3 ஏக்கர் வீதம் 5 பேருக்கும் சமமாக எழுதி வைத்திருக்கிறார் அண்ணாமலை. 2 மகன்களில் இளையவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படும் நிலையில், அவரது நிலத்தையும் மூத்தவரான ஏழுமலையே அனுபவித்துக் கொள்ளலாம் என்று கூறியிருந்தார் அண்ணாமலை. இந்த நிலையில் தன் சகோதரிகள் மூவருக்கும் தலா 3 ஏக்கர் நிலத்தை எழுதிக் கொடுத்தது ஏழுமலைக்கு பிடிக்கவில்லை. சகோதரிகள் மூவருக்கும் தலா ஒரு ஏக்கர் மட்டும் எழுதிக் கொடுத்துவிட்டு, மீதமுள்ள நிலத்தை தனக்கே எழுதிக் கொடுக்குமாறு தந்தையிடம் கேட்டு ஏழுமலை தொல்லை செய்து வந்ததாக உறவினர்கள் கூறுகின்றனர். அதற்கு அண்ணாமலை சம்மதிக்காததால், அடிக்கடி இருவருக்கும் தக...

3 நம்பர் லாட்டரியை நம்பி 3 குழந்தைகளோடு தம்பதி தற்கொலை..

விழுப்புரத்தில் 3 நம்பர் லாட்டரிக்கு அடிமையானதால் ஏற்பட்ட கடன் காரணமாக, 3 குழந்தைகளுக்கு சயனைடு கொடுத்து கொலை செய்த தம்பதி, தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.  தற்கொலைக்கு முன் தனது முடிவுக்கு என்ன காரணம் என விளக்கும் வீடியோ ஒன்றையும் அந்த இளைஞர் வெளியிட்டிருக்கிறார். விழுப்புரம் முத்தோப்பு சலாமத் நகரைச் சேர்ந்த அருண் என்பவர் வீட்டிலேயே சொந்தமாக பட்டரை வைத்துக்கொண்டு நகை செய்யும் தொழில் செய்து வந்தார்.  இவருக்கு சிவகாமி என்ற மனைவியும், பிரியதர்ஷினி, யுவஸ்ரீ மற்றும் 4 மாதமே ஆன பாரதி ஆகிய 3 பெண் குழந்தை இருந்தனர். இந்நிலையில் நேற்று இரவு வாட்ஸ் அப் மூலம் வீடியோ ஒன்றை வெளியிட்ட அவர், அதில் 3 குழந்தைகளையும் தன் தொழிலுக்கு பயன்படுத்தப்படும் சயனைட் கொடுத்து கொலை செய்து விட்டு தானும் தன் மனைவியும் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக தெரிவித்திருந்தார். மேலும் மூணு நம்பர் லாட்டரியால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், நகைத்தொழிலும் கை கொடுக்கவில்லை என்றும் பதிவிட்டு, அந்த வீடியோவை நண்பர்களுக்கு அனுப்பி விட்டு, அருணும், அவரது மனைவியும் சயனைட் சாப்பிட்டு தற்க...

பிஎஸ்.எல்.வி-சி 48இல் சென்ற ரிசாட்-2பிஆர்1 செயற்கைக்கோள் வெற்றிகரமாக நிலைநிறுத்தம்.

நாட்டின் பாதுகாப்பு, இயற்கை வளங்களை கண்டறிதல் உள்ளிட்ட ஆய்வுகளுக்காக ரிசாட் 2பிஆர் 1 என்ற செயற்கைக்கோளை இஸ்ரோ தயாரித்துள்ளது. 628 கிலோ எடைகொண்ட இந்த செயற்கைக்கோள் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது. நாட்டின் பாதுகாப்பு, இயற்கை வளங்களை கண்டறிதல் உள்ளிட்ட ஆய்வுகளுக்காக ரீசாட் 2பிஆர் 1 என்ற செயற்கைக்கோளை இஸ்ரோ தயாரித்துள்ளது. 628 கிலோ எடைகொண்ட இந்த செயற்கைகோள் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவிலுள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்திலுள்ள 1 ஆவது ஏவுதளத்திலிருந்து ஏவப்பட்டது. இதுவரை வெளிநாடுகளை சேர்ந்த 130 செயற்கைகோள்களை இஸ்ரோ விண்ணில் நிலைநிறுத்தியுள்ளது. இது ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து விண்ணில் பாயும் 75 ஆவது ராக்கெட் ஆகும். வெளிநாடுகளை சேர்ந்த மற்ற 9 செயற்கைக்கோள்களும் வெற்றிகரமாக வின்னிள் நிலைநிறுத்தப்பட்டன- இஸ்ரோ. பிஎஸ்.எல்.வி ராக்கெட் வரிசையில் 50வது ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டதால் விஞ்ஞானிகள் மகிழ்ச்சி-இஸ்ரோ தலைவர் சிவன். குழுவில் பணியாற்றிய ஒவ்வொருவரின் பெயரை கூறியும் இஸ்ரோ தலைவர் சிவன் வாழ்த்து தெரிவித்தார். பிஎஸ்எல்வி ராக்கெட்டின் 25 ஆண்டு கால பயணத்தில் இது வரலாற்று வெற்றி...

கர்ப்பிணி மனைவிக்காக நாற்காலியாக மாறிய கணவர்

Image
சீனாவில் கர்ப்பிணி மனைவிக்காக தானே நாற்காலியாக மாறிய கணவனின் செயல் காண்போரை நெகிழ வைத்துள்ளது. சீனாவைச் சேர்ந்த ஒருவர், தன் கர்ப்பிணி மனைவியை பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். மருத்துவருக்காக காத்திருந்தபோது நிறைமாத கர்ப்பிணியான மனைவிக்கு கால் வலிக்கத் தொடங்கியுள்ளது. மேலும், அங்கு அதிகக் கூட்டமாக இருந்ததால் நாற்காலிகள் அனைத்தும் நிரம்பிக் காணப்பட்டன. கர்ப்பிணிப் பெண்ணுக்கு எழுந்து இடம்தர யாரும் முன் வரவில்லை. தன் மனைவி மிகவும் சோர்வாக இருப்பதைக் கவனித்த அவரது கணவர், உடனே தரையில் மண்டியிட்டுத் தன்னை ஒரு நாற்காலி ‌போல் ஆக்கி தன் முதுகில் மனைவியை அமர வைத்துக் கொண்டார்.

சமூக வலைதள வதந்தியால் பறிபோன உயிர்.. ஆக்சிஸ் வங்கி ஊழியர் கைது..!

Image
                 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற வதந்தியை நம்பி ஆக்சிஸ் வங்கி ஊழியரிடம் 4 லட்ச ரூபாய் கொடுத்து ஏமாந்த கோவையைச் சேர்ந்த தொழிலதிபர், பணத்தை திருப்பிக் கேட்டதால் கொலை செய்யப்பட்டுள்ளார். கோவை ஈச்சனாரியில் உள்ள டாஸ்மாக் கடை அருகே கடந்த 3 ஆம் தேதி ,காயங்களுடன் சுமார் 60 வயது மதிக்கத்தக்க ஒருவர் இறந்து கிடந்தார். இதுகுறித்து 3 தனிப்படைகள் அமைத்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில், இறந்து கிடந்தவர் கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழிலதிபர் சண்முகம் என்பது தெரியவந்தது. சண்முகத்தின் செல்போன் எண்ணைக் கொண்டு நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. ஜனவரி மாதம் முதல் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்றும் பணத்தை விரைவாக மாற்றிக்கொள்ளுமாறும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளதாகவும் வாட்ஸப் போன்ற சமூக வலைதளங்களில் கடந்த சில நாட்களாகவே வதந்திகள் பரவி வருகின்றன. இது உண்மையா என்பதை அறிய, சுந்தராபுரம் ஆக்சிஸ் வங்கிக் கிளையில் விற்பனைப் பிரிவு மேலாளராகப் பணியாற்றி வரும் சதீஷை அணுகி சண்முகம் விசாரித்துள்ளா...

திருமணமாகாத ஒரு ஆணும் பெண்ணும் ஒரே அறையில் தங்குவது குற்றமாகாது என சென்னை உயர்நீதிமன்றம் தெளிவு படுத்தியுள்ளது

Image
கோயம்புத்தூரில் ஒரு தனியார் தங்கும் விடுதியின் ஒரு அறையில் திருமணமாகாத ஆணும் பெண்ணும் தங்கியிருந்ததாலும், மற்றொரு அறையில் மதுபான பாட்டில்கள் இருந்ததாலும் அந்த விடுதிக்கு போலீஸ் மற்றும் வருவாய்த் துறையினரால் சீல் வைக்கப்பட்டது. அதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்பு விசாரணைக்கு வந்தபோது, திருமணமாகாத ஆணும், பெண்ணும் ஒரே அறையில் தங்குவதில் என்ன தவறு இருக்கிறது என கேள்வி எழுப்பினார் திருமணமாகாத ஆணும் பெண்ணும் \'லிவிங் டூ கெதர்\" முறையில் சேர்ந்து வாழ்வது எப்படி குற்றமாக கருத முடியாதோ அதேபோல், இருவரும் ஒரே விடுதியில் ஒரே அறையில் தங்குவதும் குற்றமாகாது என தெளிவு படுத்தினார் அத்துடன் விடுதியின் அறையில் மதுபாட்டில்கள் கிடைத்ததால் மட்டும் அவர்கள் மது விற்பனை செய்கிறார்கள் என்று கூறி விட முடியாது என குறிப்பிட்ட நீதிபதி, உரிய சட்ட விதிமுறைகள் பின்பற்றாததால், விடுதிக்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற கோவை மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டார்

Mrs.World 2020

Image
திருமணமான இல்லத்தரசிகளுக்கென நடைபெற்ற Mrs. World போட்டியில் இலங்கையை சேர்ந்த திருமதி கரோலின் 2020 ம் வருடத்திற்கான Mrs.World பட்டத்தை வென்றார்.

என்கவுன்டரில் முடிந்த வெறி நாய்களின் கதை

Image
. வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தவர் பலாத்காரம் செய்து கொலை.. இந்தியாவை உலுக்கும் சம்பவம் என்று தலைப்பிட்டு அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை விவாதித்துக் கொண்டிருக்கிறது ஹைதராபாத் வெட்னரி பெண் டாக்டர் விவகாரத்தை.. உண்மையிலேயே கேட்க கேட்க குலை நடுங்க வைக்கிறது அந்த சம்பவம். மாலை ஐந்தரை மணிக்கு சுங்கச்சாவடி ஓரம் லாரியை நிறுத்திவிட்டு போய் மதுபாட்டில்களை வாங்கி வருகிறான் ஓட்டுநரான ஆரிஃப்.என்பவன். பின்னர் நண்பர்கள் மூவரோடு சேர்ந்து மது அருந்துகிறான். அந்த நேரம் பார்த்து அருகில் உள்ள கிளினிக்கு இளம் பெண் டாக்டர் ஒருவர் ஸ்கூட்டரை நிறுத்தி விட்டு உள்ளே போகிறார். குடிகார கும்பல் இதனை கவனிக் கிறது. உடனே ஒரு திட்டத்தையும் தீட்டுகிறது. லாரி யை கிளப்பிக்கொண்டு 5 கிலோ மீட்டர் தொலைவில் நிறுத்தி விட்டு மீண்டும் அந்த இடத்திற்கு திரும்புகி றார்கள்.. அருகில் சென்று அந்த டூவீலரின் பின் டயர் பஞ்சரை நவீன் என்பவன் பஞ்சர் ஆக்குகிறான். இரவு ஒன்பதரை ணிக்கு கிளினிக்கை விட்டு வெளியே வந்து பார்த்தபோது  தன் வண்டியின் டயர் பஞ்சர் ஆகி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைகிறார்.. அந்த நேரம் பார்த்து...

ரிலையன்ஸ் ஜியோ தொலைத் தொடர்பு நிறுவனத்தின் புதிய கட்டண விபரங்கள்

Image
வரும் டிசம்பர் 6 ஆம் தேதி முதல் செயற்படுத்தப்பட உள்ள புதிய ஆல் இன் ஒன் பிளான் கட்டண விபரத்தை ரிலையன்ஸ் ஜியோ வெளியிட்டுள்ளது. ரூ. 199 முதல் அதிகபட்சமாக ரூ.2199 வரையிலான திட்டங்களை அறிவித்துள்ளது.  ஜியோவின் பிளான்கள் 28 நாட்கள், 56 நாட்கள், 84 நாட்கள் மற்றும் 365 நாட்கள் என வழங்கப்படுள்ளது. தினமும் 1.5 ஜிபி டேட்டா வழங்குகின்ற பிளான்களில் ரூ.199 பிளான் 28 நாட்களுக்கும், ரூ.399 பிளான் 56 நாட்களுக்கும், ரூ. 555 பிளான் 84 நாட்களுக்கும் வழங்கப்படுகின்றது. ஜியோ 1.5 ஜிபி டேட்டா பிளான் ரூ.199 பிளானில் வரம்பற்ற ஜியோ அழைப்புகள், மற்ற நெட்வொர்க்குகளுக்கு 1000 நிமிடம், தினசரி 1.5 ஜிபி டேட்டா வழங்கப்படுவதுடன் 28 நாட்கள் செல்லுபடியாகும். ரூ.399 பிளானில் வரம்பற்ற ஜியோ அழைப்புகள், மற்ற நெட்வொர்க்குகளுக்கு 2000 நிமிடம், தினசரி 1.5 ஜிபி டேட்டா வழங்கப்படுவதுடன் 56 நாட்கள் செல்லுபடியாகும். ரூ.555 பிளானில் வரம்பற்ற ஜியோ அழைப்புகள், மற்ற நெட்வொர்க்குகளுக்கு 3000 நிமிடம், தினசரி 1.5 ஜிபி டேட்டா வழங்கப்படுவதுடன் 84 நாட்கள் செல்லுபடியாகும். ரூ.2199 பிளானில் வரம்பற்ற ஜியோ அழைப்புகள், மற்ற நெட்வொர்...

இமயமலை சாரலில் நித்தியானந்தா பதுங்கி இருப்பதாக தகவல்

Image
இமயமலை பகுதியில் பேசிய நித்தியின் வீடியோக்கள், பிடதி ஆசிரமத்தில் இருந்து பதிவேற்றம் என தகவல் இருப்பிடம் தெரிய வந்துள்ளதால், நித்தியை, விசாரணைக்கு உட்படுத்த போலீசார் திட்டம் தென் அமெரிக்கா அருகே தனித்தீவு வாங்கி குடிபெயர்கிறார் நித்தி என்று கூறப்பட்ட நிலையில், திடீர் திருப்பம் நித்தியானந்தாவின் நடவடிக்கைகளை உளவு அமைப்புகள் தொடர்ந்து கண்காணிப்பதாக தகவல் தனித்தீவுக்கு கைலாசா என பெயரிட்டு, அங்கே குடியுரிமை பெற இணையத்தில் வேண்டுகோள் விடுத்து வருகிறார் நித்தியானந்தா கைலாசா தீவுக்கு தனிக்கொடி, சின்னங்கள், அமைச்சர் இலாகாக்களையும் அறிவித்திருந்தார் நித்தியானந்தா* கடவுள் என்னை நேரடியாக களம் இறங்கி காப்பாற்றுகிறார்- நித்யானந்தாவின் அடுத்த புருடா.. சர்வதேச அளவில் தனக்கு எதிராக மிகப்பெரிய சதி நடப்பதாகவும் அதில் இருந்து கடவுள் நேரடியாக களம் இறங்கி தன்னை காப்பாற்றுவதாகவும் புதியதாக வெளியிட்டுள்ள வீடியோவில் நித்யானந்தா பேசியுள்ளார். சர்ச்சைகளுக்கு பெயர் பெற்ற சாமியார் நித்யானந்தா மீது குஜராத் போலீசார் கடத்தல் வழக்கு பதிவு செய்துள்ளனர். பெங்களூரை சேர்ந்த ஜனார்த்தன சர்மா என்பவரின் 2 மகள்களை ...

சந்திராயன்2 விக்ரம் லேண்டரின் இருப்பிடத்தை கண்டுப்பிடித்த மதுரை பொறியாளர் சண்முக சுப்ரமணியன்

Image
 சண்முக சுப்பிரமணியன் கண்டறிந்த உடைந்த பாகங்கள் இருக்கின்ற இடத்தை 'S' என்று நாசா குறிப்பிட்டுள்ளது.   சந்திராயன்2 விக்ரம் லேண்டரின் இருப்பிடத்தை கண்டுப்பிடித்த மதுரை பொறியாளர் சண்முக சுப்ரமணியன்சண்முக ப்ரியன் சந்திரயான் 2 விண்கலம் சுமந்து சென்ற விக்ரம் லேண்டரின் இருப்பிடத்தை கண்டுபிடிக்க மதுரை பொறியாளர் சண்முக சுப்ரமணியன் கொடுத்த தகவலே காரணம் என்று நாசா தெரிவித்துள்ளது.  இதுகுறித்து நாசா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், நாசாவின் லுனார் ரிகனைஸ்ஸான்ஸ் ஆர்பிட்டர் மூலம் விக்ரம் லேண்டர் தரையிறக்க திட்டமிடப்பட்ட இடத்தின் புகைப்படத்தை செப்டம்பர் 26ஆம் தேதி வெளியிட்டிருந்தோம். விக்ரம் லேண்டரின் உடைந்த பாகங்களை கண்டறிவதற்காக பல ஆய்வாளர்கள் அதனை பதிவிறக்கம் செய்து தேடியதாகவும், அதில் சண்முக சுப்ரமணியன் என்ற இந்திய பொறியாளர் விக்ரம் லேண்டரின் உடைந்த பாகங்கள் இருக்கும் இடம் குறித்து நாசாவிற்கு தெரியப்படுத்தினார். சண்முக சுப்பிரமணியன் அளித்த தகவலின் அடிப்படையில் மேற்கொண்டு அந்த இடத்தை ஆய்வு செய்ததன் அடிப்படையில் விக்ரம் லேண்டரின் உடைந்த பாகங்கள் கூறிய இடத்தில...

கடற்கரையில் பனி போன்ற வெண் நுரைப்படலம்: காரணம் என்ன?

Image
சென்னையில் கடந்த 4 தினங்களாக மெரினா கடற்கரை முதல் திருவான்மியூர் கடற்கரை வரை பனி போன்று வெள்ளை நுரைப்படலம் படர்ந்திருக்கிறது. பார்ப்பதற்கு ஏதோ வெளிநாட்டில் குளிர்காலங்களில் படர்ந்திருக்கும் பனி போல இருப்பதால், சுற்றுலாப் பயணிகளும், குழந்தைகளும் அதனை ஆர்வத்துடன் கண்டு களிக்கின்றனர். நம் முழங்கால் உயரம் வரை இருக்கும் இந்த வெள்ளை நுரைப்படலத்தின் அடர்த்தியும், அளவும் அதிகமாக இருப்பதால் மீன்களின் பெருக்கம் பாதிக்கப்படலாம் என மீனவர்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். கடலோரத்தில் வாழும் மக்களுக்கு சுகாதாரப் பிரச்சினைகள் ஏற்பட்டுவிடுமோ என்று கவலைப்படுகின்றனர். ஆனால், இந்த நுரை அசாதாரணமானது என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எச்சரிக்கும் வேளையில், மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் மழை நீரைக் காரணம் காட்டுகின்றனர். சென்னை கடற்கரைகளில் இந்த வெள்ளைப் படலம் ஏற்படுவது ஏன்? சென்னை கடற்கரைகளில் இத்தகைய வெள்ளை நுரைப்படலம் ஏற்படுவதற்கு மழை நீருடன் முழுமையாக சுத்திகரிக்கப்படாத வீட்டுக் கழிவு நீர் கடலில் கலப்பதே காரணம் என்று கடற்கரை வள மையத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் பூஜா குமார் கூறுகிறார். "சென்...

வாகனத்தில் லிஃப்ட் கொடுத்தால் அது சட்ட‍விரோதம் – உங்க லைசென்ஸ் பறிபோகும் – உஷார்

Image
இந்திய மோட்டார் வாகன சட்டத்தில் உள்ள சில விதிகள் தெளிவற்றதாகஉள்ளன. சில விதிகள் குறித்த விழிப்புணர்வு மக்களிடம் இருப்ப தில்லை. இவ் வகையில் கார் உரிமையாளர் ஒருவர், சட்ட விரோதம் என தெரியாமல் செய்த ‘சிறு உதவியால்”, இந்திய மோட்டார் வாகன சட்டத்தின்படி தண்டிக்கப்பட்டிருக்கிறார். அந்த உண்மை சம்பவம் இதோ… இந்தியாவின் முக்கிய நகரங்களின் பட்டியலில் இரண்டாவதாக உள்ள‍து மும்பை. மும்பையை சேர்ந்த நிதின் நாயர் என்பவர் . கடந்த மாதம் 18ம் தேதி காலை தன்காரில், அலுவலகம் சென்றுகொண்டிருந்தார். அப்போது மழை பெய்து கொண்டிருந்தது. சில பஸ்கள் கூட்ட நெரிசலில் நிரம்பி வழிந்துகொண்டிருந்தன. சில பஸ்கள் மிக வும் தாமதமாக வந்தன. இதனால் அவசரமாக அலுவலகம் செல்ல வேண்டியவர்கள் ‘லிப்ட்’ கேட்டு கொண் டிருந்தனர். அப்படி ஏர்ரோலி சர்க்கிள் என்ற பகுதியில், நிதின் நாயரிடமும் 3 பேர் ‘லிப்ட்’ கேட்டனர். அவர்களில் ஒருவர் 60 வயதை கடந்த முதியவர். 2பேர் புகழ்பெற்ற ஐடி நிறுவனத்தி ல் வேலை செய்பவர்கள். அவர்கள் காந்தி நகர் என்ற பகுதிக் கு செல்ல வேண்டும். காந்தி நகரை கடந்துதான் நிதின் நாயர் தனது அலுவலகத் திற்கு செல்ல வேண்டியிருந்தது. ...