திருமணமாகாத ஒரு ஆணும் பெண்ணும் ஒரே அறையில் தங்குவது குற்றமாகாது என சென்னை உயர்நீதிமன்றம் தெளிவு படுத்தியுள்ளது






கோயம்புத்தூரில் ஒரு தனியார் தங்கும் விடுதியின் ஒரு அறையில் திருமணமாகாத ஆணும் பெண்ணும் தங்கியிருந்ததாலும், மற்றொரு அறையில் மதுபான பாட்டில்கள் இருந்ததாலும் அந்த விடுதிக்கு போலீஸ் மற்றும் வருவாய்த் துறையினரால் சீல் வைக்கப்பட்டது.

அதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்பு விசாரணைக்கு வந்தபோது, திருமணமாகாத ஆணும், பெண்ணும் ஒரே அறையில் தங்குவதில் என்ன தவறு இருக்கிறது என கேள்வி எழுப்பினார்

திருமணமாகாத ஆணும் பெண்ணும் \'லிவிங் டூ கெதர்\" முறையில் சேர்ந்து வாழ்வது எப்படி குற்றமாக கருத முடியாதோ அதேபோல், இருவரும் ஒரே விடுதியில் ஒரே அறையில் தங்குவதும் குற்றமாகாது என தெளிவு படுத்தினார்


அத்துடன் விடுதியின் அறையில் மதுபாட்டில்கள் கிடைத்ததால் மட்டும் அவர்கள் மது விற்பனை செய்கிறார்கள் என்று கூறி விட முடியாது என குறிப்பிட்ட நீதிபதி, உரிய சட்ட விதிமுறைகள் பின்பற்றாததால், விடுதிக்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற கோவை மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டார்

Comments

Popular posts from this blog

தென்காசி மாவட்டம் முழு விவரம்

பிஎஸ்.எல்.வி-சி 48இல் சென்ற ரிசாட்-2பிஆர்1 செயற்கைக்கோள் வெற்றிகரமாக நிலைநிறுத்தம்.

ஐந்தரை ஆண்டுகளுக்கு பின் பேட் செய்த சச்சின் : முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்டி அசத்தினார்