என்கவுன்டரில் முடிந்த வெறி நாய்களின் கதை
.
வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தவர் பலாத்காரம் செய்து கொலை.. இந்தியாவை உலுக்கும் சம்பவம் என்று தலைப்பிட்டு அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை விவாதித்துக் கொண்டிருக்கிறது ஹைதராபாத் வெட்னரி பெண் டாக்டர் விவகாரத்தை..
உண்மையிலேயே கேட்க கேட்க குலை நடுங்க வைக்கிறது அந்த சம்பவம்.
மாலை ஐந்தரை மணிக்கு சுங்கச்சாவடி ஓரம் லாரியை நிறுத்திவிட்டு போய் மதுபாட்டில்களை வாங்கி வருகிறான் ஓட்டுநரான ஆரிஃப்.என்பவன். பின்னர் நண்பர்கள் மூவரோடு சேர்ந்து மது அருந்துகிறான்.
அந்த நேரம் பார்த்து அருகில் உள்ள கிளினிக்கு இளம் பெண் டாக்டர் ஒருவர் ஸ்கூட்டரை நிறுத்தி விட்டு உள்ளே போகிறார். குடிகார கும்பல் இதனை கவனிக் கிறது. உடனே ஒரு திட்டத்தையும் தீட்டுகிறது. லாரி யை கிளப்பிக்கொண்டு 5 கிலோ மீட்டர் தொலைவில் நிறுத்தி விட்டு மீண்டும் அந்த இடத்திற்கு திரும்புகி றார்கள்.. அருகில் சென்று அந்த டூவீலரின் பின் டயர் பஞ்சரை நவீன் என்பவன் பஞ்சர் ஆக்குகிறான்.
இரவு ஒன்பதரை ணிக்கு கிளினிக்கை விட்டு வெளியே வந்து பார்த்தபோது தன் வண்டியின் டயர் பஞ்சர் ஆகி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைகிறார்..
அந்த நேரம் பார்த்து உதவி செய்வதாக ஓடிவருகி றான் குடிகார கும்பலைச் சேர்ந்த சிவா என்பவன்.
வண்டியை தள்ளிக் கொண்டு போனவன் கொஞ்ச நேரம் கழித்து வந்து எல்லா கடைகளும் மூடி இருப்பதாக சொல்கிறான்..
இதற்குள் தனது வீட்டிற்கு போன் செய்யும் பெண், யாரோ ஒருவர் உதவிகொண்டிருப்பதாக சொல்லி விட்டு போனை கட் செய்கிறார்..
கொஞ்ச நேரத்தில் பதுங்கியிருந்த குடிகார கும்பல் வெளியே வந்து பெண் டாக்டரை இழுத்துக் கொண்டு மறைவான இடத்திற்கு போகிறது. அங்கு முதல் வேலையாக அவரின் செல்போனை நவீன்ச் சுவிட்ச் ஆப் செய்கிறான்..அவனேதான் பெண் டாக்டர் கத்தாமல் இருக்க அவர் மயக்கம் அடையவைக்கும் முயற்சியில் வாயில் வலிய வலிய மதுவையும் ஊற்றுகிறான்..
அதற்குப்பிறகு ஆரிஃப் உள்ளிட்டநான்கு பேரும் கூட்டாக பலாத்காரம் செய்கிறார்கள்..மயக்கம் தெளிந்ததும் பெண் டாக்டர் கூச்சலிடுகிறார் இனி அவரை உயிரோடு விட்டு வைக்கக்கூடாது என்று முடிவு கட்டுகிறார்கள். லாரி டிரைவர் ஆரீஃப் பெண் டாக்டரின் வாயையும் மூக்கையும் ஒரே நேரத்தில் அழுத்திப்பிடிக்கிறான் அதில் அவர் மூச்சு திணறி இறந்து போகிறார்
பெண் டாக்டரின் கடிகாரம் போன் பவர்பேங்க் ஆகிய அனைத்தையும் நவீன் எடுத்துக்கொள்கிறான். பெண் டாக்டரின் உடலை லாரியில் போட்டுவிட்டு.சிவா வும் நவீனும் டூ-வீலரில் சென்று ஒரு பாட்டிலில் பெட்ரோலை வாங்கி வருகிறார்கள்..அருகில் உள்ள பாலத்தின் கீழே பெண் டாக்டரின் உடலைப் போட்டு பெட்ரோல் ஊற்றி எரிக்கிறார்கள். பின்னர் அவர்கள் வீட்டிற்கு திரும்பி போகிறார்கள்
இதற்கிடையே பெண் டாக்டரை வீட்டிலுள்ளவர்கள் தேட ஆரம்பிக்கிறார்கள்..காவல் நிலையத்திற்கு சென்று புகார் கொடுத்தால், யாருடனாவது ஓடிப்போய் இருப்பாள் என்று நக்கலடித்து விட்டு புகாரை வாங்க மறுத்து விடுகின்றனர்..
புகாரை வாங்கியே ஆக வேண்டும் என்று பெண் டாக்டர் குடும்பத்தினர் வற்புறுத்தியதும், இது எங்கள் எல்லையில் வரவில்லை என்று மாறிமாறி வெவ்வேறு காவல் நிலையங்களுக்கு விரட்டி அடிக்கின்றனர் போலீசார்..
கடைசியில் காலை 7 மணிக்கு எரிந்த நிலையில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார் பெண் டாக்டர்..
சுங்கச்சாவடி மற்றும் பெட்ரோல் பங்க் ஊழியர்கள் தகவல்கள் மற்றும் கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகள் குற்றவாளிகளை துல்லியமாக அடையாளம் காட்டின. அதைவைத்து நாலுபேரையும் போலீசார் கைது செய்துவிட்டனர்.
வீதியில் செல்லும் ஒரு பெண்ணை இழுத்துக் கொண்டு போய் பலாத்காரம் செய்து, கொன்று உடலை எரித்துவிட்டு சர்வ சாதாரணமாக வீட்டுக்கு போகிறார்கள் என்றால் அவர்களின் மனநிலை எத்தகையதாக இருக்கும்..
வாழ்க்கையில் பல போராட்டங்களை சந்தித்து தன் அறிவால் படித்து டாக்டர் ஆகி ஏராளமான எதிர்கால கனவுகளுடன் வாழும் ஒரு இளம் பெண், அவர்க ளுக்கு காமத்தை இறக்கிவைக்கும் வெறும் உடலாக மட்டுமே தெரிந்திருக்கிறார்.
பலாத்காரம் படுகொலை உடல் எரிப்பு என பயங்கரங் களை தொடர்ச்சியாக செய்துவிட்டு, இப்படி செய்து விட்டோமே என்ற பயமே இல்லாமல் வெகு இயல் பாக வீட்டுக்கு போயிருக்கிறார்கள். என்றால் அவர் களுக்கு குடும்ப உறவுகள் மட்டுமல்ல, இந்த நாட்டின் சட்ட திட்டங்கள்கூட அவர்களுக்கு ஒரு பொருட்டல்ல என்றே தெரிகிறது.
அப்புறம் எதற்கு இவர்களையெல்லாம் வைத்துக் கொண்டு இந்த நாட்டில் உங்களுக்கு சட்டம் என்ன சொல்கிறது தெரியுமா என்றெல்லாம் காட்டிக் கொண்டிருக்க வேண்டும் என்று கேட்டால், அது அப்பட்டமாக கோப உணர்ச்சியின் உச்சகட்டமாக தெரியும்.
அதேபோலத்தான், பெண்ணை காணோம் என்று புகாரோடு போனால் எவன் கூடவாவது ஓடிப்போயி ருப்பாள் என்று நக்கலடித்த போலீசார். எதற்காக தங்களை பணியில் அமர்த்தி அரசாங்கம் சம்பளம் கொடுக்கிறது என்பது பற்றி கவலையே இல்லாத அவர்களை, டிஸ்மிஸ் பண்ணாமல் வெறும் சஸ்பெண்ட்தான் செய்யவேண்டுமா என்று கேட்டால் அதுவும் அப்பட்டமாக கோப உணர்ச்சியின் உச்சகட்டமாகவே தெரியும்..
சரி சட்டப்படி என்னதான் அடுத்தடுத்து நடக்கும்?
பார்ப்போம்.
ENCOUNTER
ஐதராபாத்தில் பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்த 4 பேர் என்கவுண்டரில் சுட்டுக் கொன்றது போலீசார்
இந்த நான்கு பேரும் தப்பி ஓட முயன்ற போது இச்சம்பவம் நடைபெற்றது
அதிகாலை ஹைதராபாத் - பெங்களூரு நெடுஞ்சாலையான ‘44 நெடுஞ்சாலை; அருகே 4 பேரையும் போலீஸார் அழைத்துச் சென்றுள்ளனர். அவர்களிடம் பெண் மருத்துவரை எப்படி கொலை செய்தனர் ? என போலீஸார் செய்து காட்டச்சொல்லியுள்ளனர்.
அவ்வாறு செய்து காட்டும்போது, அவர்கள் நான்கு பேரும் தப்பி ஓடியதாக தெரிகிறது. அப்போது அவர்களை தடுக்க முயன்ற போலீஸாரையும் தாக்கிவிட்டு 4 பேரும் தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. இதையடுத்து போலீஸார் தற்காப்பிற்காக 4 பேரையும் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொன்றதாக போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments
Post a Comment