பிஎஸ்.எல்.வி-சி 48இல் சென்ற ரிசாட்-2பிஆர்1 செயற்கைக்கோள் வெற்றிகரமாக நிலைநிறுத்தம்.

நாட்டின் பாதுகாப்பு, இயற்கை வளங்களை கண்டறிதல் உள்ளிட்ட ஆய்வுகளுக்காக ரிசாட் 2பிஆர் 1 என்ற செயற்கைக்கோளை இஸ்ரோ தயாரித்துள்ளது.

628 கிலோ எடைகொண்ட இந்த செயற்கைக்கோள் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது.

நாட்டின் பாதுகாப்பு, இயற்கை வளங்களை கண்டறிதல் உள்ளிட்ட ஆய்வுகளுக்காக ரீசாட் 2பிஆர் 1 என்ற செயற்கைக்கோளை இஸ்ரோ தயாரித்துள்ளது. 628 கிலோ எடைகொண்ட இந்த செயற்கைகோள் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவிலுள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்திலுள்ள 1 ஆவது ஏவுதளத்திலிருந்து ஏவப்பட்டது.

இதுவரை வெளிநாடுகளை சேர்ந்த 130 செயற்கைகோள்களை இஸ்ரோ விண்ணில் நிலைநிறுத்தியுள்ளது. இது ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து விண்ணில் பாயும் 75 ஆவது ராக்கெட் ஆகும்.

வெளிநாடுகளை சேர்ந்த மற்ற 9 செயற்கைக்கோள்களும் வெற்றிகரமாக வின்னிள் நிலைநிறுத்தப்பட்டன- இஸ்ரோ.

பிஎஸ்.எல்.வி ராக்கெட் வரிசையில் 50வது ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டதால் விஞ்ஞானிகள் மகிழ்ச்சி-இஸ்ரோ தலைவர் சிவன்.

குழுவில் பணியாற்றிய ஒவ்வொருவரின் பெயரை கூறியும் இஸ்ரோ தலைவர் சிவன் வாழ்த்து தெரிவித்தார்.

பிஎஸ்எல்வி ராக்கெட்டின் 25 ஆண்டு கால பயணத்தில் இது வரலாற்று வெற்றி - சிவன்.

இஸ்ரோவின் கடந்த கால மற்றும் நிகழ்கால முன்னோடிகளால் இந்த சாதனை நிகழ்ந்துள்ளது - சிவன்.

Popular posts from this blog

தென்காசி மாவட்டம் முழு விவரம்

ஐந்தரை ஆண்டுகளுக்கு பின் பேட் செய்த சச்சின் : முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்டி அசத்தினார்