சந்திராயன்2 விக்ரம் லேண்டரின் இருப்பிடத்தை கண்டுப்பிடித்த மதுரை பொறியாளர் சண்முக சுப்ரமணியன்
சண்முக சுப்பிரமணியன் கண்டறிந்த உடைந்த பாகங்கள் இருக்கின்ற இடத்தை 'S' என்று நாசா குறிப்பிட்டுள்ளது.
சந்திராயன்2 விக்ரம் லேண்டரின் இருப்பிடத்தை கண்டுப்பிடித்த மதுரை பொறியாளர் சண்முக சுப்ரமணியன்சண்முக ப்ரியன்
சந்திரயான் 2 விண்கலம் சுமந்து சென்ற விக்ரம் லேண்டரின் இருப்பிடத்தை கண்டுபிடிக்க மதுரை பொறியாளர் சண்முக சுப்ரமணியன் கொடுத்த தகவலே காரணம் என்று நாசா தெரிவித்துள்ளது.
இதுகுறித்து நாசா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், நாசாவின் லுனார் ரிகனைஸ்ஸான்ஸ் ஆர்பிட்டர் மூலம் விக்ரம் லேண்டர் தரையிறக்க திட்டமிடப்பட்ட இடத்தின் புகைப்படத்தை செப்டம்பர் 26ஆம் தேதி வெளியிட்டிருந்தோம். விக்ரம் லேண்டரின் உடைந்த பாகங்களை கண்டறிவதற்காக பல ஆய்வாளர்கள் அதனை பதிவிறக்கம் செய்து தேடியதாகவும், அதில் சண்முக சுப்ரமணியன் என்ற இந்திய பொறியாளர் விக்ரம் லேண்டரின் உடைந்த பாகங்கள் இருக்கும் இடம் குறித்து நாசாவிற்கு தெரியப்படுத்தினார்.
சண்முக சுப்பிரமணியன் அளித்த தகவலின் அடிப்படையில் மேற்கொண்டு அந்த இடத்தை ஆய்வு செய்ததன் அடிப்படையில் விக்ரம் லேண்டரின் உடைந்த பாகங்கள் கூறிய இடத்தில் இருப்பதை நாங்கள் உறுதி செய்தோம் என தெரிவித்துள்ளனர்.
Comments
Post a Comment