முஷாரப் இறந்துவிட்டால் அவர் சடலத்தை 3 நாள் தொங்க விடுங்கள்-பாகிஸ்தான் நீதிமன்றம்.
முன்னாள் அதிபர் முஷாரப்புக்கு தேச துரோக வழக்கில் தூக்கு தண்டனை விதித்த பெஷாவர் உயர்நீதிமன்றத்தின் சிறப்பு பிரிவு தனது தீர்ப்பின் முழு விவரத்தையும் நேற்று வெளியிட்டது.
இதில் முஷாரப் மரணம் அடைந்து விட்டாலும் அவர் சடலத்தை தரதரவென இழுத்து வர வேண்டும் என்றும் நாடாளுமன்றத்திற்கு கொண்டு வந்து 3 நாட்களுக்கு தூக்கில் தொங்க விட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு அளித்துள்ள இந்த தீர்ப்பில், முஷாரப்பை குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே குற்றவாளியை தூக்கில் இட வேண்டும் என்றும் அந்த தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 169 பக்கங்கள் கொண்ட இந்த தீர்ப்பின் விவரம் வெளியானதையடுத்து முஷாரப்பின் தண்டனை நிறைவேற்றப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்த வழக்கில் மேல்முறையீடு செய்ய முஷாரப் தரப்பு திட்டமிடுவதாகவும் கூறப்படுகிறது. தற்போது உடல் நலிந்த நிலையில் துபாயில் வசிக்கும் முஷாரப் தம் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்.
இந்த வழக்கு அடிப்படையற்றது என்றும், பாகிஸ்தான் அதிபராக பத்தாண்டுகள் பணியாற்றியிருப்பதாகவும், நாட்டுக்காக போர் முனைக்கு சென்றதாகவும் முஷாரப் தெரிவித்துள்ளார்.
Comments
Post a Comment