கள்ளக்குறிச்சி 34 வது மாவட்டமாக உதயம்


விழுப்புரம் மாவட்டத்தை இரண்டாக பிரித்து, கள்ளக்குறிச்சி மாவட்டம் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூர் ஆகிய 2 வருவாய் கோட்டங்களுடன், கள்ளக்குறிச்சி, சின்னசேலம், திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை, சங்கராபுரம் மற்றும் புதிய தாலுகாவான கல்வராயன் மலை ஆகிய 6 தாலுகாக்கள் இடம்பெற்றுள்ளன. இந்த புதிய கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சங்கராபுரம், ரிஷிவந்தியம், கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை, திருக்கோவிலும் ஆகிய 5 சட்ட சபை தொகுதிகள் அடங்கும். மேலும், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியராக கிரண்குராலாவும், காவல் கண்காணிப்பாளராக ஜெயச்சந்திரனும் நியமிக்கப்பட்டுள்ளனர். 
இந்நிலையில், இந்த புதிய கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் தொடக்க விழா அங்குள்ள சாமியார் மடம் மைதானத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். புதிய கள்ளக்குறிச்சி மாவட்டத்தை முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார். மேலும் அவர் திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

Comments

Popular posts from this blog

தென்காசி மாவட்டம் முழு விவரம்

பிஎஸ்.எல்.வி-சி 48இல் சென்ற ரிசாட்-2பிஆர்1 செயற்கைக்கோள் வெற்றிகரமாக நிலைநிறுத்தம்.

ஐந்தரை ஆண்டுகளுக்கு பின் பேட் செய்த சச்சின் : முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்டி அசத்தினார்