வறண்ட பூமியில் விவசாயம்.. பட்டையக்கௌப்பும் பஞ்சாபியர்கள்
இராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே வல்லந்தை கிராமத்தில் 200 ஏக்கர் பரப்பளவில் கொத்துக்கொத்தாய் அனைத்துப்பழங்கள் காய்கறிகள்.. நம்பமுடியவில்லையா. எங்களாலயும் நம்பத்தான் முடியல வாங்க பாப்போம்….
இந்தியாவின் புண்ணியஸ்தலங்களில்ஒன்றான இராமநாதபுரம் மாவட்டத்தில்உள்ள ராமேஸ்வரத்திற்கு உலகின் பலபகுதிகளிலிருந்து யாத்ரீகர்கள் வருகைதருவது வாடிக்கையான ஒன்று. அதுபோன்று யாத்ரீகர்களாய் வந்தவர்கள்தான்பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தமன்மோகன்சிங் மற்றும் தர்ஷன்சிங்ஆகிய இருவரும். பிறரைப்போல் ஆலயதரிசனத்திற்குப் பிறகு ஊர் திரும்பாமல்,இவர்கள் பார்வை இந்த வறண்ட பூமியின்மீது பட்டது. வற்றாத ஐந்து நதிகளைக்கொண்டு எப்போதும் முப்போகம்விளைவிக்கும் தங்களின் பூமியை கண்டஇவர்களுக்கு, குடிநீருக்கே வழியின்றிதவித்து வரும் இந்த மாவட்டத்தில்விவசாயம் செய்ய வேண்டும் என்பதைஒரு சவாலாக எடுத்துக் கொண்டனர்.
வறண்ட பூமி என ஒதுக்கப்பட்ட நிலத்தில் வளமான விவசாயம்.
இதனையடுத்து இப்பகுதியில்விவசாயத்திற்கேன சொந்தமாக நிலம்வாங்க முடிவு செய்தனர். நில மதிப்பீடுபஞ்சாப்பைக் காட்டிலும் இங்கு மிககுறைவாக இருந்தது இவர்களுக்குசாதகமாக அமைந்தது. ஆகவே இங்குகமுதி அருகே “வல்லந்தை” கிராமத்தில் முட்புதர்களால் மண்டியிருந்த உள்ளூர்விவசாயிகளால் புறக்கணிப்பட்ட 800 ஏக்கர்நிலத்தை “2007” ஆம் ஆண்டு சொந்தமாக விலைக்கு வாங்கி, தங்களின் கடினஉழைப்பாலும், தன்னம்பிக்கையாலும் அந்த நிலத்திற்கு மறு வடிவம் தந்தனர்.தங்களுக்கு உறுதுணையாக அவர்களின்உறவினற்களான இருபது நபர்களைக்கொண்ட ஐந்து குடும்பங்களை அழைத்துக் கொண்டனர்.
சோலைவனமான பாலைவனம்
அதன்பிறகு தங்களின் கடின உழைப்பால்இரவுபகல் உறக்கமின்றி வறண்டு போய்க்காணப்பட்ட இந்த பாலைவனத்தைசோலைவனமாக்கத் தொடங்கினர். தாங்கள் வாங்கிய 800 ஏக்கர் நிலத்தில்,நான்கு ஆழ்துளை கிணறுகளைஅமைத்து, சொட்டுநீர் பாசனம் மூலம் 200ஏக்கர் பரப்பளவு நிலத்தில் மட்டும்தென்னை, மா, பழா,கொய்யா, உள்ளிட்ட பழவகைகளையும்நெல்லி,மற்றும்தர்பூசணி,வெள்ளரி,வெங்காயம்உள்ளிட்ட அனைத்து வகைகாய்கறிகளையும் இத்துடன் தேனீக்களைவளர்த்து தேன் உற்பத்தியையும் செய்ய தொடங்கினர். இந்த விவசாயத்திற்குதேவையான உரங்களை தாங்கள்வளர்த்து வரும் கால்நடைகளின்கழிவுகளை கொண்டு முற்றிலுமாகஇயற்கை வேளாண் முறையில் உற்பத்திசெய்யத் தொடங்கியது இதன்சிறப்பம்சமாகும்.
இயற்கை முறையில் விளைய வச்ச பொருள் நல்லவிலைக்குவிக்குது
இங்கு விளைவிக்கப்படும் காய்கறிகள்மற்றும் உள்ளிட்ட அனைத்துஇயற்கைமுறையில் விளைஞ்ச பொருட்களையும் சந்தைப்படுத்தஅருகிலுள்ள கமுதி,முதுகுளத்தூர்,வீரசோழன் மற்றும் பார்த்திபனூர் ஆகியஊர்களில் நடைபெற்று வரும்வாரச்சந்தைகளில் குறைந்த விலைக்கு விற்பனை செய்து உள்ளூர் மக்கள்பயன்பெறச் செய்தனர். தற்போதுவிளைவிக்கப்ட்ட இமாம்பசந்த்,அல்போன்ஸா,பங்கனப்பள்ளிஉள்ளிட்ட மா வகைகள் சுவை அதிகமாகஇருப்பதால், சுற்றுவட்டார பொதுமக்கள்இவர்களின் தோட்டத்திற்கே வந்துவிரும்பி வாங்கிச் செல்கின்றனர்.
கரண்டு இல்ல ஆனா எல்லா வேலையும் நல்லா நடக்குது
வறண்ட பூமியை வளமாக்கிய இவர்களின்கடின உழைப்பிற்கு பரிசளிக்கும்வகையில், இம்மாவட்ட நிர்வாகம் சூரியஒளி மின் உற்பத்தி திட்டத்திற்கும்இயற்கை உரம் தயாரித்தல்ஆகியவற்றிற்கு தேவையான முழுமானிய கடனுதவி வழங்கி மற்றும்பழவகை மரக்கன்றுகள் வழங்கியும்ஊக்கப்படுத்துகிறது. இம்மண்ணில் இவர்களுடைய கடின உழைப்பிற்குகிடைத்த பலனாக மதுரை மாவட்டம்டி.கல்லுப்பட்டி என்னுமிடத்தில்மற்றுபொறு 800 ஏக்கர் நிலங்கள் வாங்கிவிவசாயத்திற்கு தயாராகி வருகின்றனர்.
சொந்த ஊரில் வாழ்வது போலவே சந்தோஷமான வாழ்க்கை
மேலும், இங்கு தங்கி விவசாயம் செய்துவரும் பஞ்சாபிய குடும்பங்களுக்குத்தேவையான அடிப்படை வசதிகளான,தங்க இடம், வழிபாட்டுத்தலம், சூரிய ஒளிமின் வசதி, உணவு மற்றும் மருத்துவவசதிகளை ஏற்படுத்திக் கொண்டுஉள்ளூரில் வசிப்பது போலவே வாழ்ந்துவருகின்றனர்.
நம்மாளுகளும் இது போல உழைக்கத் தொடங்கினால்
மல்லிகை தன் மணம் அறியாதது போல,நம்முடைய நிலங்களின் வளம் நம்மவர்கள் அறியாத நிலையில், 3400கிலோ மீட்டர் தொலைவுக்கு அப்பாலிருந்துவந்த நம் பஞ்சாபிய சகோதரர்கள்தங்களின் உழைப்பை விதைத்து பலனைஅறுவடை செய்து வருகிறார்கள்.இவர்களை போல நமது விவசாயிகள்தன்னம்பிக்கையோடு உழைக்க முன்வந்தால், பயிர் காப்பீட்டு இன்சூரன்ஸ்தொகைக்காக அரசிடம் கையேந்தும்நிலை மாறும் என்பதில் எந்த சந்தேகமும்இல்லை.

