திருப்பதி ஏழுமலையான் கூடுதல் பிரகாசத்தில்

திருப்பதி கருவறையில் கூடுதல் நெய் விளக்குகள் ஏழுமலையானை தூரத்தில் இருந்தே தரிசிக்கலாம்.

திருப்பதி ஏழுமலையான் கோயில் கருவறையில் கூடுதல் நெய் விளக்குகளை ஏற்றி, தொலைவில் இருந்தாலும் சுவாமியை பக்தர்கள் தெளிவாக பார்த்து தரிசிக்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப் பட்டுள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள், ஜெயபேரி விஜயபேரி சிலை அருகில் இருந்து சுமார் 70 மீட்டர் தொலைவில் நின்றபடி ஏழுமலையானை தரிசிக்க வேண்டி உள்ளது.

இவ்வாறு தரிசிக்கும்போது சுவாமியின் உருவம் தெளிவாக தெரியாமல் பக்தர்கள் மன வேதனை அடைகின்றனர்.

மேலும் கோயிலின் ஆகம விதிப்படி கருவறையில் மின்விளக்குகள் பொருத்தக்கூடாது என்பதால் நெய் விளக்குகள் ஏற்றப்பட்டுள்ளது.

இதனால் போதிய வெளிச்சம் இல்லாததால் சுவாமியை தரிசிக்க முடியவில்லை என பக்தர்கள் புகார் தெரிவித்து வந்தனர்.

இதையடுத்து கோயில் கருவறையில் 2 ஏகாங்கிகள் நியமித்து கூடுதலாக 2 நெய்விளக்குகள் வைக்கப்பட்டு அதிகளவு நெய் ஊற்றி அந்த விளக்குகளில் உள்ள திரிகளை அதிகாலை 2.30 மணி, பகல் 11 மணி, மாலை 6.30 மணி என 3 வேளைகளில் மாற்றி பிரகாசமாக எரிய விடப்பட்டுள்ளது.

இந்த திட்டம் நேற்று முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. கூடுதல் விளக்குகள் வெளிச்சத்தில் கருவறையில் உள்ள ஏழுமலையானை பக்தர்கள் தெளிவாக கண்டு தரிசனம் செய்வதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Comments

Popular posts from this blog

தென்காசி மாவட்டம் முழு விவரம்

பிஎஸ்.எல்.வி-சி 48இல் சென்ற ரிசாட்-2பிஆர்1 செயற்கைக்கோள் வெற்றிகரமாக நிலைநிறுத்தம்.

ஐந்தரை ஆண்டுகளுக்கு பின் பேட் செய்த சச்சின் : முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்டி அசத்தினார்