மலைப்பகுதியில் நடந்துசென்று மருத்துவம் பார்த்த டாக்டர்





கரடுமுரடான மலைப்பாதையில் நடந்து சென்று, நடுவழியிலேயே பெண்ணுக்கு பிரசவம் பார்த்து காப்பாற்றிய இளம் மருத்துவர்

கந்தமல் மாவட்டத்தில் உள்ள மலைப்பகுதியில் வசிக்கும் ரைதா என்ற பெண் பிரசவம் நெருங்கும் நேரத்தில் சாலை வசதியற்ற பகுதியில் சுமார் ஒன்றரை கிலோமீட்டர் நடந்தே அழைத்துவரப்பட்டார். வழியிலேயே கடும் சிரமத்திற்கு மத்தியில் தமது முதல் குழந்தையைப் பெற்றெடுத்தார். ஆனால், நஞ்சுக்கொடி உள்ளேயே தங்கிவிட்ட தகவல் அறிந்த யக்னதத்த ராத் (Yagnadatta Rath)என்ற இளம் மருத்துவர், ஆம்புலன்சில் புறப்பட்டார். 


வாகனம் செல்லமுடியாத கட்டத்தில் இறங்கி 4 கி.மீ. மலைப்பாதையை நடந்தே கடந்து தாயையும், சேயையும் காப்பாற்றினார். மலைவாழ் பெண்ணைக் காப்பாற்ற சிரத்தை மேற்கொண்ட மருத்துவருக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுக்கள் குவிகின்றன.

Comments

Popular posts from this blog

தென்காசி மாவட்டம் முழு விவரம்

பிஎஸ்.எல்.வி-சி 48இல் சென்ற ரிசாட்-2பிஆர்1 செயற்கைக்கோள் வெற்றிகரமாக நிலைநிறுத்தம்.

ஐந்தரை ஆண்டுகளுக்கு பின் பேட் செய்த சச்சின் : முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்டி அசத்தினார்