இலங்கை தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி அரிச்சல் முனை வரையிலான கடல் பகுதியை 12 மணி 20 நிமிடங்களில் நீந்திக் கடந்து ரயில்வே காவல்துறை ஏடிஜிபி சைலேந்திரபாபு சாதனை
தமிழகத்தின் 33வது புதிய மாவட்டமாக தென்காசி மாவட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார். நெல்லை மாவட்டம் 16 தாலுகாக்கள், 10 சட்டசபை தொகுதிகள், நெல்லை, தென்காசி என 2 எம்பி தொகுதிகளுடன் பெரிய மாவட்டமாக இருந்தது. நெல்லையை பிரித்து தென்காசியை தலைமையிடமாகக் கொண்டு தனி மாவட்டம் அமைக்க வேண்டும் என கடந்த 28 ஆண்டுகளாக கோரிக்கை இருந்து வந்தது. இந்நிலையில் தென்காசியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அமைத்து தமிழக அரசு கடந்த 12ம் தேதி அரசு ஆணை பிறப்பித்தது. தென்காசி புதிய மாவட்டத்தில் ஏற்கெனவே உள்ள தென்காசி கோட்டத்துடன் புதிதாக சங்கரன்கோவில் கோட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் தென்காசி மாவட்டத்தில் தென்காசி, செங்கோட்டை, கடையநல்லூர், சிவகிரி, வீரகேரளம்புதூர், சங்கரன்கோவில், திருவேங்கடம் மற்றும் ஆலங்குளம் ஆகிய 8 தாலுகாக்கள், 251 கிராமங்கள் இணைக்கப்பட்டுள்ளன. தென்காசி புதிய மாவட்டத்திற்கான அரசு ஆணை வெளியிடப்பட்டதை தொடர்ந்து கலெக்டராக அருண் சுந்தர் தயாளன், எஸ்பியாக சுகுணாசிங், மாவட்ட வருவாய் அலுவலராக கல்...
நாட்டின் பாதுகாப்பு, இயற்கை வளங்களை கண்டறிதல் உள்ளிட்ட ஆய்வுகளுக்காக ரிசாட் 2பிஆர் 1 என்ற செயற்கைக்கோளை இஸ்ரோ தயாரித்துள்ளது. 628 கிலோ எடைகொண்ட இந்த செயற்கைக்கோள் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது. நாட்டின் பாதுகாப்பு, இயற்கை வளங்களை கண்டறிதல் உள்ளிட்ட ஆய்வுகளுக்காக ரீசாட் 2பிஆர் 1 என்ற செயற்கைக்கோளை இஸ்ரோ தயாரித்துள்ளது. 628 கிலோ எடைகொண்ட இந்த செயற்கைகோள் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவிலுள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்திலுள்ள 1 ஆவது ஏவுதளத்திலிருந்து ஏவப்பட்டது. இதுவரை வெளிநாடுகளை சேர்ந்த 130 செயற்கைகோள்களை இஸ்ரோ விண்ணில் நிலைநிறுத்தியுள்ளது. இது ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து விண்ணில் பாயும் 75 ஆவது ராக்கெட் ஆகும். வெளிநாடுகளை சேர்ந்த மற்ற 9 செயற்கைக்கோள்களும் வெற்றிகரமாக வின்னிள் நிலைநிறுத்தப்பட்டன- இஸ்ரோ. பிஎஸ்.எல்.வி ராக்கெட் வரிசையில் 50வது ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டதால் விஞ்ஞானிகள் மகிழ்ச்சி-இஸ்ரோ தலைவர் சிவன். குழுவில் பணியாற்றிய ஒவ்வொருவரின் பெயரை கூறியும் இஸ்ரோ தலைவர் சிவன் வாழ்த்து தெரிவித்தார். பிஎஸ்எல்வி ராக்கெட்டின் 25 ஆண்டு கால பயணத்தில் இது வரலாற்று வெற்றி...
இன்று மும்பை சட்டசபையை முற்றுகையிட வந்த விவசாயிகளுக்காக இஸ்லாமிய சகோதரர்கள் உணவு மற்றும் தண்ணீர் பாட்டில், பிஸ்கெட் பாக்கெட்டுகளுடன் காத்திருந்த சகோதரத்துவம...
Comments
Post a Comment