உலக தண்ணீர் தினத்தில் நொய்யல் சுனை நீர்

பல ஆண்டுகளுக்கு பின்னர்
நொய்யலின் சுனை நீரை
சுவைத்து மகிழ்ந்த 
கோவை மக்கள்!!!



உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு இன்று (22.03.2018)
நீர்நிலகளை காக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு மற்றும் சிறுதுளி
சார்பில் வனத்துறை அனுமதியுடன்
நொய்யலின் பல்வேறு சுனைகளிலிருந்து
எடுக்கப்பட்ட
நொய்யலின் சுனைநீர்
கோவை மாநகரின் பல்வேறு இடங்களில்(காந்திபுரம் பேருந்து நிலையம்,உக்கம் பேருந்து நிலையம், டவுன்ஹால் மாநகராட்சி அலுவலகம்,ரேஸ் கோர்ஸ்
சிறுவர் பூங்கா,லட்சுமி மில்ஸ்,ரயில் நிலையம், நீதிமன்ற வளாகம்,Prozone Mall) சுமார் 200 தன்னார்வலர்களின் பங்களிப்போடு 20000 பேருக்கு வழங்கப்பட்டது.



இந்த நிகழ்வில் கோவை மாநகரில் இருக்கும் உக்கடம் குளம்,வாலாங்குளம்,குறிச்சி குளம்,சிங்காநல்லூர் குளம்,மற்றும் முத்தண்ணன் குளம் ஆகிய
குளங்களில் இருக்கும் நீரினை காட்சிப்படுத்திடும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

இந்த நிகழ்வினை அனைத்து பொதுமக்களும் ஆவலோடு வரவேற்றனர்.மேலும் அவர்களுக்கு நீர் மற்றும் நீர்நிலைகளின் அவசியம் குறித்த போதுமான விழிப்புணர்வு கிடைத்ததாக தெரிவித்தனர்.



கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு மற்றும் சிறுதுளி இணைந்து ஒருங்கிணைத்த நீர் வழங்கும் விழாவின் நிகழ்வில் Rapid Action Force கமாண்டோக்கள் மற்றும் டெக்ஸ் சிட்டி,காருண்யா கலை அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் பங்குபெற்றனர்.



மேலும் இன்று பிஷப் அப்பாசாமி கல்லூரியில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் சார்பில் மாணவர்களுக்கு நீர் மற்றும் நீர்நிலைகளின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Comments

Popular posts from this blog

தென்காசி மாவட்டம் முழு விவரம்

பிஎஸ்.எல்.வி-சி 48இல் சென்ற ரிசாட்-2பிஆர்1 செயற்கைக்கோள் வெற்றிகரமாக நிலைநிறுத்தம்.

ஐந்தரை ஆண்டுகளுக்கு பின் பேட் செய்த சச்சின் : முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்டி அசத்தினார்