Posts

Showing posts from November, 2019

பி.எஸ்.எல்.வி சி-47 ராக்கெட் மூலம் கார்டோசாட்-3

Image
ஸ்ரீ ஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி சி-47 ராக்கெட் மூலம் கார்டோசாட்-3 செயற்கை கோள் 27-11-2019 விண்ணில் செலுத்தப்பட்டது. 5 ஆண்டுகள் ஆயுட்காலம் கொண்ட இந்த செயற்கைகோள் துல்லியமாக புகைப்படங்கள் எடுத்து அனுப்பும் திறன் கொண்டது என அவர் குறிப்பிட்டார். பெரிய அளவிலான நகர பயன்பாட்டு திட்டம், கடற்கரையோர நிலங்களின் பயன்பாடு உள்ளிட்ட பணிகளுக்கு இது பயன்படும்.

73 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஸ்டீவ் ஸ்மித்: சச்சின், சேவாக்கையும் முந்தினார்

Image
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை ஆஸ்திரேலியா அணி கைப்பற்றியது. அதன்பின்னர், இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டிகளில் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி இன்னிங்ஸ் மற்றும் 5 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தியது. 2வது டெஸ்ட் போட்டி அடிலெய்டு நகரில் நேற்று தொடங்கியது. முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வரும் ஆஸ்திரேலிய அணி டேவிட் வார்னரின் இரட்டைச் சதம் மற்றும் மார்னஸ் லாபுசாக்னேவின் 162 ரன்களால் வலுவான நிலையில் உள்ளது. மார்னஸ் லாபுசாக்னேவின் ஆட்டமிழந்த பின் நட்சத்திர ஆட்டக்காரரான ஸ்டீவ் ஸ்மித் களமிறங்கிறங்கினார். இந்நிலையில், இரண்டாம் நாள் ஆட்டம் இன்று தொடங்கிய சிறிது நேரத்தில், ஸ்டீவ் ஸ்மித் 23 ரன்கள் எடுத்தபோது டெஸ்ட் கிரிக்கெட்டுகளில் அதிவேகமாக 7 ஆயிரம் ரன்கள் எடுத்து 73 ஆண்டுகால சாதனையை முறியடித்தார். 126 இன்னிங்ஸ்களில் ஸ்மித் இந்த சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன்பு இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் வாலி ஹேமண்ட் 131 இன்னிங்ஸ்களில் 7 ஆயிரம் ரன்கள் கடந்த...

இந்தியாவில் மிகவும் குறுகிய காலம் முதல்வராக இருந்தவர்கள்

Image

மத்தியப் பிரதேசத்தில் பயங்கரம்: 11 மணி நேரம் பெற்றோரின் உடல்களுடன் தவித்த 3 வயது குழந்தை

போபால் மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியர் மாவட்டத்தில், பெற்றோரின் உடல்களுடன் 3 வயது குழந்தை 11 மணி நேரம் அழுதபடி இருந்தது அனைவரின் நெஞ்சையும் பதற வைப்பதாக உள்ளது. சம்பவம் குறித்து குவாலியர் காவல்துறை கூறுகையில், வேலையில்லாமல் இருந்த சத்யேந்திர சௌஹானுக்கும், மனைவி அன்ஷுவுக்கும் இடையே கடும் சண்டை மூண்டுள்ளதுள்ளது. இதில் சத்யேந்திரா மனைவியைக் கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். ராணுவ அதிகாரியான தனது சகோதரரின் துப்பாக்கியால் மனைவியை சுட்டுக் கொன்றுவிட்டு, தானும் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனைப் பார்த்த 3 வயது குழந்தை அதிர்ச்சியில் உறைந்துவிட்டார். ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருந்த அந்த வீட்டில், தாத்தா பாட்டியும் இல்லாத நிலையில், பெற்றோர் மரணம் அடைந்துவிட, அவர்களது உடலுடன் 11 மணி நேரம் 3 வயது குழந்தை தன்னந்தனியாக தவித்துள்ளார். சனிக்கிழமை இரவு இந்த சம்பவம் நடைபெற்ற நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை அன்ஷுவின் தந்தை தனது மகளுடன் பேச வேண்டும் என்று தொலைபேசியில் அழைக்க, தொலைபேசிய எடுத்த குழந்தை, "அம்மாவும் அப்பாவும் இறந்துவிட்டார்கள், எனக்கு மிகவும் பசிக்கிறது, சீக்...

கள்ளக்குறிச்சி 34 வது மாவட்டமாக உதயம்

Image
விழுப்புரம் மாவட்டத்தை இரண்டாக பிரித்து, கள்ளக்குறிச்சி மாவட்டம் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூர் ஆகிய 2 வருவாய் கோட்டங்களுடன், கள்ளக்குறிச்சி, சின்னசேலம், திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை, சங்கராபுரம் மற்றும் புதிய தாலுகாவான கல்வராயன் மலை ஆகிய 6 தாலுகாக்கள் இடம்பெற்றுள்ளன. இந்த புதிய கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சங்கராபுரம், ரிஷிவந்தியம், கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை, திருக்கோவிலும் ஆகிய 5 சட்ட சபை தொகுதிகள் அடங்கும். மேலும், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியராக கிரண்குராலாவும், காவல் கண்காணிப்பாளராக ஜெயச்சந்திரனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.  இந்நிலையில், இந்த புதிய கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் தொடக்க விழா அங்குள்ள சாமியார் மடம் மைதானத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். புதிய கள்ளக்குறிச்சி மாவட்டத்தை முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார். மேலும் அவர் திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

தமிழ்நாடு அரசுப்பணியளர் தேர்வாணையம்

Image
தமிழ்நாடு அரசுப்பணியளர் தேர்வாணையம் அண்மையில், தொகுதி II மற்றும் IIA இல் அடங்கிய பணிகளுக்கு  முதனிலைத்தேர்வு மற்றும் முதன்மைத் தேர்வு நடத்த முடிவு செய்து அதற்கான புதிய பாடத்திட்டம் மற்றும் தேர்வுத்திட்டம் ஆகியவற்றை வெளியிட்டது. முதனிலைத் தேர்வில் தமிழ் மற்றும் ஆங்கிலப் பாட கேள்விகளை நீக்கிவிட்டு, பொது அறிவு சார்ந்த 200 கேள்விகள் மட்டுமே கேட்கப்படும் எனவும், முதன்மை எழுத்துத் தேர்வில் மொழிபெயர்ப்பு, பொருள் உணர்திறன், சுருக்கி வரைதல், கடிதம் எழுதுதல் உள்ளிட்ட கேள்விகள் கேட்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து தேர்வர்களின் நலன் கருதி முதன்மை எழுத்துத் தேர்வில் தேர்வாணையம் சில மாற்றங்கள் செய்தது. அதன்படி, மொழிபெயர்ப்பு பகுதி தனியாகப் பிரிக்கப்பட்டு தனித் தாளாக நடத்தவும் அதில் குறைந்தபட்ச மதிப்பெண் 25 பெற வேண்டும் எனவும், அம்மதிப்பெண், தர நிர்ணயத்திற்கு கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டது. இம்முடிவினை பல்வேறு தரப்பிலிருந்து வரவேற்ற போதும், ஏற்கனவே இத்தேர்வுக்காக பழைய தேர்வுத்திட்டத்தின் படி தயாராகிக்கொண்டிருக்கும் ஒரு சில மாணவர்கள், தொகுதி II மற...

ஓ.பி.எஸ் குறித்து சர்ச்சை பேச்சு - குருமூர்த்தி விளக்கம்

Image
ஓ.பன்னீர்செல்வத்தை தனிப்பட்ட முறையில் குறிப்பிடவில்லை. அதிமுகவினர் துணிவில்லாமல் ஏன் சசிகலா காலில் விழுகிறார்கள்? என்கிற அர்த்தத்தில் தான் கேட்டேன் என்று குருமூர்த்தி விளக்கம் அளித்துள்ளார். திருச்சியில் நேற்று நடந்த துக்ளக் வார இதழின் பொன்விழாக் கூட்டத்தில் பேசிய துக்ளக்கின் ஆசிரியர் குருமூர்த்தி, தான் சொன்னதால் தான் ஓ.பன்னீர்செல்வம் ஜெயலலிதா சமாதியில் அமர்ந்து தர்ம யுத்தம் நடத்தினார் என்று கூறியிருந்தார். மேலும், “சசிகலாவை முதல்வராக்க பணிகள் நடந்தபோது, என்னிடம் வந்த ஓ.பன்னீர்செல்வத்திடம், நீங்கள் எல்லாம் ஆம்பளையா...? எதுக்கு இருக்கீங்க...? என்று கேட்டேன். நான் கூறியதால் தான் ஓ.பன்னீர்செல்வம் ஜெயலலிதா சமாதியில் அமர்ந்து தியானம் செய்து அதன் மூலம் ஒரு மாற்றம் ஏற்பட்டது.  அதன் பிறகு பிரிந்து கிடக்கும் அதிமுகவை ஒருங்கிணைத்தேன்” என்று பேசியிருந்தார். ஓ.பன்னீர்செல்வம் பற்றி குருமூர்த்தி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. குருமூர்த்தி ஆணவத்தின் உச்சத்தில் பேசியிருப்பதாகவும் அவர் நாவை அடக்க வேண்டும் என்றும் அமைச்சர் ஜெயகுமார் கூறி இருந்தார். இந்த நிலையில், நேற்றைய பேச்சு பற்றி க...

கேஸ் சிலிண்டர் வாங்கினால் மானிய பணம் சரியான முறையில அக்கவுண்ட்ல வருதா எப்படி தெரிந்துகொள்வது?

Image
மத்திய அரசு மாதம் தோறும் நாம் வாங்கும் சிலிண்டருக்கு மானியம் வழங்குகிறது, அந்த பணம் நமது வங்கி கணக்கிற்க்கு தான் அந்த மானியம் வரும். ஆனால் நமது விரைவான வாழ்வில் நமது மானிய தொகை நம் வங்கி கணக்கிற்க்கு மாதம் தோறும் வருகின்றதா என்று பலரும் சரிவர கவனிப்பதில்லை ஒரு சிலர் பணம் வரவில்லை என்று கேஸ்கம்பெனி வாசலில் காத்திருக்கின்றார்கள். ஆனால் அத்னை நீங்கள் எங்கும் அலையாமல் வீட்டில் இருந்தே மாதா மாதம் நம் மானிய தொகை சரியாக வந்துவிடுகின்றதா என்று சரிபார்த்துகொள்ளலாம். அதேபோல் மானிய தொகை வரவில்லை என்றால் அதற்க்கும் புகார் கொடுக்கலாம். எப்படி என்று பார்ப்போம் முதலில் நீங்கள் www.mylpg.in வெப்சைட்டில் செல்ல வேண்டும், அங்கு உங்களுக்கு 3 கேஸ் நிறுவனத்தின் பெயர் இருக்கும், அதில் உங்களின் கேஸ் கனெக்சன் பெயரை க்ளிக் செய்ய வேண்டும். அதில் நீங்கள் NEW USER சென்று உங்கள் விவரங்களை பதிவு செய்யுங்கள். பிறகு லாக் இன் செய்து உள் நுழையுங்கள். உள் நுழைந்த பிறகு LPG லிருந்து சம்பத்தப்பட்ட அனைத்து தகவல்களும் உங்களுக்கு கிடைத்து விடும், அதில் TRACK YOUR REFILL என்று உள்ளதை கிளிக் செய்தால் நீங்கள் கேஸ் வா...

டிக்டாக் சகவாசம் சேலையை கிழித்தது..! வீதிக்கு வந்த பெண்கள்

Image
மதுரையில் டிக்டாக்கில் நடிப்புத்திறமையை காட்டிய இரு தோழிகளை, விலைமாதர்களாக சித்தரித்து அதே டிக்டாக்கில் பரப்பியதால், தோழிகளில் ஒருவர் குடும்பத்தை பிரிந்து வீதியில் தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். டிக்டாக் ஒரு ஸ்வீட் பாய்சன்..! என்று பலமுறையை தலைபாடாக அடித்தாலும் கேட்காமல், டிக்டாக் மிகவும் பாதுகாப்பான பொழுதுபோக்கு செயலி என்று நம்பி வீடியோ பதிவிட்ட சில பெண்கள், தங்கள் குடும்பத்தினரை பிரிந்து அவமானத்துடன் வீதியில் தவிக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. மதுரை மாவட்டம் ஒத்தக்கடையை சேர்ந்த தோழிகளான மீனாட்சியும் கயலும் பாரம்பரிய உடையான சேலையுடன் டிக்டாக்கில் தோன்றி தாயும் பிள்ளையுமாக நடிப்புத்திறமையை வெளிக்காட்டுவது வழக்கம். இருவருக்கும் திருமணமான நிலையில் டிக்டாக் செயலிக்கு அடிமையானதால் அவ்வப்போது ஆன்மீகம், நையாண்டி, நகைச்சுவை போன்ற வீடியோக்களையும் டிக்டாக் செயலியில் பதிவிட்டு லைக்ஸ்களை அள்ளியதாக கூறப்படுகிறது. சல்லிக் காசுக்கு பிரயோசனமில்லாத லைக்குகளுக்கு ஆசைப்பட்டு மீனாட்சியும் கயலும் தங்களுடைய டிக்டாக் பிரைவேட் கணக்கில் பதிவிட்ட வீடியோக்க...

தென்காசி மாவட்டம் முழு விவரம்

Image
  தமிழகத்தின் 33வது புதிய மாவட்டமாக தென்காசி மாவட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி  துவக்கி வைத்தார். நெல்லை மாவட்டம் 16 தாலுகாக்கள், 10 சட்டசபை தொகுதிகள், நெல்லை, தென்காசி என 2 எம்பி தொகுதிகளுடன் பெரிய மாவட்டமாக இருந்தது. நெல்லையை பிரித்து தென்காசியை தலைமையிடமாகக் கொண்டு தனி மாவட்டம் அமைக்க வேண்டும் என கடந்த 28 ஆண்டுகளாக கோரிக்கை இருந்து வந்தது. இந்நிலையில் தென்காசியை தலைமையிடமாகக்  கொண்டு புதிய  மாவட்டம் அமைத்து தமிழக அரசு கடந்த  12ம் தேதி அரசு ஆணை பிறப்பித்தது. தென்காசி  புதிய மாவட்டத்தில் ஏற்கெனவே உள்ள தென்காசி கோட்டத்துடன் புதிதாக சங்கரன்கோவில் கோட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் தென்காசி மாவட்டத்தில் தென்காசி,   செங்கோட்டை, கடையநல்லூர், சிவகிரி, வீரகேரளம்புதூர், சங்கரன்கோவில், திருவேங்கடம் மற்றும் ஆலங்குளம் ஆகிய 8   தாலுகாக்கள், 251 கிராமங்கள் இணைக்கப்பட்டுள்ளன. தென்காசி புதிய  மாவட்டத்திற்கான அரசு ஆணை வெளியிடப்பட்டதை தொடர்ந்து கலெக்டராக அருண்  சுந்தர் தயாளன், எஸ்பியாக சுகுணாசிங், மாவட்ட வருவாய் அலுவலராக கல்...

துண்டு சீட்டை வைத்து வடமாநில குற்றவாளிகளை துண்டாடிய இராமநாதபுரம் மாவட்ட போலீசார்...

Image
துண்டு சீட்டை வைத்து வடமாநில குற்றவாளிகளை துண்டாடிய இராமநாதபுரம் மாவட்ட போலீசார்... தீரன் திரைப்படத்தில் ஒரு துப்பாக்கி தோட்டாவை வைத்து மொத்த திருட்டு கும்பல் நெட்வொர்க்கையே பிடிப்பது போல, ஒரு துண்டு சீட்டை வைத்து ஆந்திர மாநில திருட்டு கும்பலை பிடித்துள்ளனர் தமிழக போலீசார். ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த ஒரு பெண்ணின் வீட்டில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பஞ்சு, சுமதி என்ற இரு பெண்கள் வாடகைக்கு வசித்துவந்துள்ளனர். இவர்களுடன் வாடகைக்கு வீடு கொடுத்த பெண் உறவினர்கள் போல அன்னியோன்னியமாகப் பழகியுள்ளார். நாள்கள் செல்லச் செல்ல இவர்களிடையே நட்பு பலப்பட வாடகைக்குக் குடியிருந்த இருவரையும் வீட்டுக்குள்ளேயே அழைத்து உட்கார வைத்துப் பேசுவது, அவர்களுக்கு உணவு அளிப்பது என அதீதப் பாசம் காட்டியுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் கார் விற்ற பணம் ரூபாய் 2.5 லட்சத்தை பீரோவில் வைக்கச்சென்றவர் பீரோவை சரிவரப் பூட்டவில்லை. அப்போது தண்ணீர் லாரி வந்த காரணத்தால் வெளியில் சென்றுள்ளார் அந்த பெண். தண்ணீர் எடுத்துவிட்டு வீடு திரும்பிய போது, பணம் வைத்திருந்த பீரோ திறந்து கிடப்பதையும் அதிலிருந்த 5.5 சவரன் ...

jio vs bsnl

Image
ஜியோவை மிஞ்சிய அதிரடி ஆஃபரை அறிவித்த பி.எஸ்.என்.எல். இந்தியாவில் தொலைதொடர்பு நிறுவனங்களான பாரதி ஏர்டெல், வோடஃபோன் ஐடியா, ஜியோ உள்ளிட்டவை நஷ்டக்கணக்கு காட்டி வரும் நிலையில் வருங்காலத்தில் கட்டணங்களை உயர்த்தபோவதாக அறிக்கைகள் கடந்த வாரத்தில் வெளிவந்தது. இந்நிலையில் இந்திய அரசாங்கத்தின் பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என். எல், ஒரு அதிரடி ஆஃபரை அறிவித்துள்ளது. அதில், ரூ.1699க்கு 365 நாட்களுக்கு தினசரி 250 நிமிடம் கால்கள் இலவசம், தினசரி 2 ஜிபி இணையவசதி மற்றும் 100 எஸ்.எம்.எஸ் இலவசம் என்று தெரிவித்துள்ளது. மேலும் அந்த அறிவிப்பில், நவம்பர் மாதத்திற்குள் பி.எஸ்.என்.எல் தொலைதொடர்பு சேவை பயன்படுத்தி இந்த ஆஃபரை அணுகுபவர்களுக்கு 365+60 நாட்கள் இலவசம் என்று தெரிவித்துள்ளது. அண்மையில்தான் பி.எஸ்.என்.எல் நிறுவனத்திற்கு 4ஜி இணையசேவைக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது இந்த அறிவிப்பு ட்விட்டரில் இந்தியளவில் ட்ரெண்டாகி வருகிறது.*