வறண்ட பூமியில் விவசாயம்.. பட்டையக்கௌப்பும் பஞ்சாபியர்கள்
இராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே வல்லந்தை கிராமத்தில் 200 ஏக்கர் பரப்பளவில் கொத்துக்கொத்தாய் அனைத்துப்பழங்கள் காய்கறிகள்.. நம்பமுடியவில்லையா. எங்களாலயும் நம்பத்தான் முடியல வாங்க பாப்போம்…. இந்தியாவின் புண்ணியஸ்தலங்களில்ஒன்றான இராமநாதபுரம் மாவட்டத்தில்உள்ள ராமேஸ்வரத்திற்கு உலகின் பலபகுதிகளிலிருந்து யாத்ரீகர்கள் வருகைதருவது வாடிக்கையான ஒன்று. அதுபோன்று யாத்ரீகர்களாய் வந்தவர்கள்தான்பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தமன்மோகன்சிங் மற்றும் தர்ஷன்சிங்ஆகிய இருவரும். பிறரைப்போல் ஆலயதரிசனத்திற்குப் பிறகு ஊர் திரும்பாமல்,இவர்கள் பார்வை இந்த வறண்ட பூமியின்மீது பட்டது. வற்றாத ஐந்து நதிகளைக்கொண்டு எப்போதும் முப்போகம்விளைவிக்கும் தங்களின் பூமியை கண்டஇவர்களுக்கு, குடிநீருக்கே வழியின்றிதவித்து வரும் இந்த மாவட்டத்தில்விவசாயம் செய்ய வேண்டும் என்பதைஒரு சவாலாக எடுத்துக் கொண்டனர். வறண்ட பூமி என ஒதுக்கப்பட்ட நிலத்தில் வளமான விவசாயம். இதனையடுத்து இப்பகுதியில்விவசாயத்திற்கேன சொந்தமாக நிலம்வாங்க முடிவு செய்தனர். நில மதிப்பீடுபஞ்சாப்பைக் காட்டிலும் இங்கு மிககுறைவாக இருந்த...