உருமாற்றிக்கொள்ளும் கொரோனா வைரஸ்.. பயனற்றதாக மாறும் தடுப்பு மருந்துகள்.. விஞ்ஞானிகள் கவலை.
கொரோன வைரஸ் உருமாற்றம் அடைவதாக கூறினார்கள். இந்நிலையில் அந்த வைரஸில் உள்ள சில விகாரங்கள் மனிதர்களுக்கு ஏற்றதாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கவலை தெரிவித்துள்ளனர். இதற்கு காரணம் கொரோனாவுக்கு எதிரான தடுப்பு மருந்துகளில் இருந்து தப்பிக்கும் வகையில் கொரோனாவைரஸ் தன்னை மனித உடலில் உருமாற்றிக்கொள்கிறதாம். இதனால் விஞ்ஞானிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் சுமார் 200 நாடுகளில் 40 லட்சம் பேரை பாதித்துள்ளது. சுமார் 2லட்சத்துக்கும் அதிகமான மக்களை கொன்றுள்ளது. இந்த வைரஸ் தொற்றுக்கு மருந்து கண்டுபிடிக்க உலகின் பல்வேறு நாடுகளும் ஆய்வு செய்து வருகின்றன. மற்ற வைரஸ் தொற்றுகளை போல் அல்லாமல் கொரோனா வைரஸ் தொற்று ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு மிக எளிதாக பரவுகிறது,. அறிகுறிகள் தெரியும் முன்பே பலருக்கும் பரவிவிடுகிறது. இதனால் கட்டுப்படுத்துவது சிரமமாக உள்ளது. இந்த கொரோனா வைரஸ் தொற்றுக்கு மருந்து கண்டுபிடிப்பதில் சில சிக்கல்கள் இருப்பதற்கு முக்கிய காரணம் அந்த வைரஸ் அதிலிருந்து தப்பிக்கும் வகையில் தன்னை உருமாற்றிக்கொள்ளத் தொடங்கியதுதானாம். இருவிஷயங்களை ஏற்றுக்கொள்கிற...