Posts

கஞ்சா விற்ற நீலகிரி காவலர்கள்: மாவட்ட எஸ்பி எடுத்த அதிரடி ஆக்‌ஷன்!

Image
நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகே கடந்த வாரம் கஞ்சா விற்றுக்கொண்டிருந்த சரத்குமார் என்பவரை போலீஸார் கைது செய்தனர். அவரை விசாரித்ததில், எருமாடு காவல் நிலையத்தில் பணிபுரியும் அமரன் என்ற காவலர் கஞ்சா கொடுத்து விற்கச் சொன்னதாக கூறினார். இதனால், அதிர்ச்சி அடைந்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆஷிஸ் ராவத், இந்த விவகாரத்தில் நேரடியாக தலையிட்டு தீவிரமாக விசாரிக்க உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து விசாரித்தில் வேலியே பயிரை மேய்ந்த கதையாக 4 போலீஸார் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது வெளிச்சத்துக்கு வந்தது. இதுகுறித்து போலீஸார் கூறுகையில், " தேனி காவல் நிலையத்தில் கணேசன் என்பவர் பணிபுரிந்து வந்தார். கஞ்சா வியாபாரிகள் தொடர்பில் இருந்ததாக கூறப்பட்டதால் இவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து கூடலூர் எருமாடு காவல் நிலையத்தில் பணிபுரியும் அவரது நண்பரும், காவலருமான அமரனைத் தேடி கணேசன் எருமாடு வந்தார். அங்கிருந்தபடியே கேரளா மாநிலத்திலிருந்து கஞ்சா வாங்கி அமரனிடம் விற்க கொடுத்துள்ளார். இதையடுத்து அமரன் உதகையில் கஞ்சாவை விற்றுள்ளார். இது தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் தான், சரத்குமார...

விநாயகர் சதுர்த்தி!இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கே வித்திட்ட விழா!

Image
விநாயகர் சதுர்த்தி! இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கே வித்திட்ட விழா! சொத்தை காரணங்களை காட்டி தடை செய்யக் கூடாது!! டாக்டர் க. கிருஷ்ணசாமி MD, நிறுவனர்& தலைவர், புதிய தமிழகம் கட்சி.  இந்திய தேசத்தின் உள்ளும், எல்லைக்கு அப்பாலும் உலகெங்கும் வாழக்கூடிய இந்துக்கள் அனைவராலும் கொண்டாடப்படக்கூடிய மிக முக்கியமான விழா ’விநாயகர் சதுர்த்தி’ ஆகும். மண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை பத்து தினங்கள் தங்களுடைய வீடுகளிலும், பொது இடங்களிலும் அலங்கரித்து, அவற்றை ஆடல் பாடலுடன் எடுத்துச் சென்று அருகாமையில் உள்ள நீர்நிலைகளில் கரைப்பதே ‘விநாயகர் சதுர்த்தி’யின் சிறப்பம்சமாகும். இந்துக்களின் ஒவ்வொரு விழாவிற்குள்ளும் ஏதாவது ஒரு நல்ல அடிப்படை அம்சம் அல்லது காரணம் ஒளிந்திருக்கும். இறை நம்பிக்கையைத் தாண்டி இந்துக்களின் ஒற்றுமையையும், தேச ஒற்றுமையையும் வலியுறுத்துவதே விநாயகர் சதுர்த்தியின் சிறப்பு அம்சமாகும். இந்த உண்மை வரலாற்றைத் தெரிந்து கொள்ளாததால், இது குறிப்பிட்ட ஒரு தேசிய கட்சி  அல்லது ஒரு முன்னணி  அல்லது ஒரு சங்கத்தின் விழாவாக மட்டுமே சிலர் குறுக்கிப் பார்க்கிறார்கள். அது தவற...

உருமாற்றிக்கொள்ளும் கொரோனா வைரஸ்.. பயனற்றதாக மாறும் தடுப்பு மருந்துகள்.. விஞ்ஞானிகள் கவலை.

Image
கொரோன வைரஸ் உருமாற்றம் அடைவதாக கூறினார்கள். இந்நிலையில் அந்த வைரஸில் உள்ள சில விகாரங்கள் மனிதர்களுக்கு ஏற்றதாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கவலை தெரிவித்துள்ளனர். இதற்கு காரணம் கொரோனாவுக்கு எதிரான தடுப்பு மருந்துகளில் இருந்து தப்பிக்கும் வகையில் கொரோனாவைரஸ் தன்னை மனித உடலில் உருமாற்றிக்கொள்கிறதாம். இதனால் விஞ்ஞானிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் சுமார் 200 நாடுகளில் 40 லட்சம் பேரை பாதித்துள்ளது. சுமார் 2லட்சத்துக்கும் அதிகமான மக்களை கொன்றுள்ளது. இந்த வைரஸ் தொற்றுக்கு மருந்து கண்டுபிடிக்க உலகின் பல்வேறு நாடுகளும் ஆய்வு செய்து வருகின்றன. மற்ற வைரஸ் தொற்றுகளை போல் அல்லாமல் கொரோனா வைரஸ் தொற்று ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு மிக எளிதாக பரவுகிறது,. அறிகுறிகள் தெரியும் முன்பே பலருக்கும் பரவிவிடுகிறது. இதனால் கட்டுப்படுத்துவது சிரமமாக உள்ளது. இந்த கொரோனா வைரஸ் தொற்றுக்கு மருந்து கண்டுபிடிப்பதில் சில சிக்கல்கள் இருப்பதற்கு முக்கிய காரணம் அந்த வைரஸ் அதிலிருந்து தப்பிக்கும் வகையில் தன்னை உருமாற்றிக்கொள்ளத் தொடங்கியதுதானாம். இருவிஷயங்களை ஏற்றுக்கொள்கிற...

என் அப்பன் எங்கே?

Image
என் அப்பன் எங்கே? என்று 15 வயது சிறுமி கேட்டு அழும் வீடியோ வெளியாகி, தமிழக மக்களை நிலைகுலைய வைத்து வருகிறது!.        விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூரை அடுத்திருக்கும் சிறுமதுரை காலனியை சேர்ந்த தம்பதி ஜெயபால் - ராஜி. இவர்களுக்கு 2 ஆண், 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இதில் மூத்த மகள்தான் ஜெயஸ்ரீ.           10-ம் வகுப்பு படித்து வந்தார். 15 வயதாகிறது. விவசாயி கூலி செய்து வரும் ஜெயபால், வீட்டிலேயே ஒரு சிறிய பெட்டிக்கடையும் நடத்தி வருகிறார்.           நேற்று தம்பதி இருவரும் வெளியே சென்றுவிட்ட நிலையில் ஜெயஸ்ரீ மட்டும் வீட்டில் இருந்தார். காலை 11 மணி இருக்கும்.. திடீரென வீட்டிற்குள் இருந்து புகை வருவதை கண்டு அக்கம்பக்கத்தினர் அலறி அடித்து கொண்டு ஜெயபால் வீட்டிற்குள் சென்றனர்.அங்கே ஜெயஸ்ரீ நெருப்பில் வெந்து கொண்டிருந்தார்.உடம்பெல்லாம் தீ பற்றி எரிய அலறி துடித்தார். அதை பார்த்து பதறிய அவர்கள் ஆம்புலன்ஸை வரவழைத்து உடனடியாக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.          ....

மிகப்பெரும் தொழிலதிபர்களின் கடன் தள்ளுபடியா? உண்மை என்ன?

Image
விஜய் மல்லையா, மெஹுல் சோக்சி உள்ளிட்ட மிகப்பெரும் தொழிலதிபர்களின் ரூ.68000 கோடி மதிப்புள்ள கடனை ரிசர்வ் வங்கி தள்ளுபடி செய்திருப்பதாக கடந்த சில நாட்களாக செய்திகள் வருகின்றன. இது குறித்து பல விமர்சனங்களும் முன்வைக்கப்படுகின்றன. விமர்சனம் செய்வதில் தவறில்லை. ஆனால் ஒன்றை விமர்சனம் செய்வதற்கு முன்பாக அதைப்பற்றி தெளிவாக என்னவென்று தெரிந்து கொண்டு விமர்சனம் செய்ய வேண்டும். Write off என்பது வராக்கடன். Waive off என்பது கடன் தள்ளுபடி. தற்போது செய்யப்பட்டிருப்பது Write Off தானே தவிர. Waive off அல்ல. Write off க்கும் Waive off என்பதற்கும் உள்ள வேறுபாட்டை புரிந்துகொள்ள வேண்டும். நீண்ட நாட்களாக அதாவது 4 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள கடன்கள் வராக் கடன்களாக கருதப்படும். கடன்களை நீண்ட ஆண்டுகளாக கடன் பட்டியலில் வைத்திருக்க முடியாது. அப்படி செய்தால் இருப்பு நிலை குறிப்பு என்று சொல்லப்படும் Balance Sheet ஐ Tally செல்வதில் பிரச்சனை ஏற்படும். எனவே அந்த கடன்களை வராக் கடன்கள் பட்டியலில் சேர்ப்பார்கள். அதாவது NPA (Non-Performing Assets). இதைதான் Accounting நடைமுறையில் Write Off என்று அழைப்பார்கள். வரா...

கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டோர் அனைவரும் உயிரிழப்பதில்லை. உயிரிழப்பு யாருக்கு ஏற்படுகிறது? எப்படி ஏற்படுகிறது?

Image
உலக அளவில் பெரும் அச்சத் ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ், பெரும்பாலும் முதியோர்களையும் நீரிழிவு, ஆஸ்துமா மற்றும் இதய நோய் உள்ளிட்ட உபாதைகளைக் கொண்டிருப்போரையுமே தீவிரமாக தாக்குகிறது. இறுதியாக, நிமோனியா காய்ச்சல் அதாவது நுரையீரல் அழற்சியை ஏற்படுத்தி மனிதர்களை, சார்ஸ் கோவிட் வைரஸ் வீழ்த்துகிறது. கொரோனா வைரஸ், முகம் வழியாக உடலில் நுழைந்த பின், தொண்டை அருகில் உள்ள செல்களில் தொற்றிக் கொள்கிறது. அப்போது சிலருக்கு தொண்டை கரகரப்பு ஏற்படும். பின்னர் சுவாசக் குழாய் வழியாக நுரையீரலின் வெளிப்பகுதியை அடைந்து, அங்கிருந்தபடி பல்கி பெருகி தன் வேலையைக் காட்ட ஆரம்பிக்கின்றன. சுவாசக் குழாய் சுவர்களை அரிக்கத் தொடங்கி பின்னர் உட்புறத்தில் வீக்கத்தை வைரஸ் ஏற்படுத்துகிறது. இந்த நிலையை உடல் எட்டும்போது பாதிக்கப்பட்டவருக்கு கடும் இருமல் ஏற்படும். சுவாசக் குழாய் சுவர்களை அரித்து ஆல்வியோலி எனும் சுவாச சிற்றரைகளை கொரோனா வைரஸ் அடையும்போது பாதிப்பு அதிதீவிரமாகிறது. இந்த சிற்றரைகளில்தான் ஆக்சிஜனை உள்வாங்கி கரியமிலவாயுவை பிரித்து அனுப்பும் பணி நடக்கிறது. சுவாச சிற்றரை பாதிக்கப்படும்போது அங்கு நீர் கோ...

வெப்பம் அதிகரிக்கும் நிலையில் கொரோனா வைரஸ் வலுவிழக்கும்

வெப்பம் அதிகரிக்கும் நிலையில் கொரோனா வைரஸ் வலுவிழக்கும் வகையில் இருப்பதாக அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.         அமெரிக்க அறிவியல் பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்பத்துறை இயக்குனரகத்தின் செயல் தலைவர் வில்லியம் பிரையன், கொரோனா வைரஸ் தொடர்பாக கூறுகையில் உட்புற மற்றும் வெப்பம் குறைந்த நிலையில் கொரோனா வைரஸின் செயல்பாடு இயல்பாக இருக்கிறதென்றும், அதே வேளையில் வெப்பம் மற்றும் ஈரப்பதம் குறையும் நேரங்களில் கொரோனா வலுவிழப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் இது தொடர்பாக பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய அவர் நேரடி சூரிய ஒளியில் வைரஸ் விரைவாக மரணிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதே நேரத்தில் வெப்ப மண்டல நாடுகளான சிங்கப்பூரில் கூட கொரோனாவின் தாக்கம் அதிகரித்தே காணப்படுவது இந்த ஆராய்ச்சியாளர்களின் கூற்றை கேள்விக்குறியாக்குவதாக உள்ளது. கோடை காலத்தில் கொரோனாவின் தாக்கம் வலுவிழக்கும் என்ற ஆராய்ச்சியாளர்களின் கருத்து தொடர்பாக எச்சரிக்கையுடன், கவனமாக பரிசீலிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். வில்லியம் பிரையன் கூறுகைய...